Advertisment

'நா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - ரஜினிகாந்திடம் பயிற்சி தொடங்கிய பும்ரா - (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jasprit Bumrah starts training under Delhi Capitals’ Rajnikanth Sivagnanam - 'நா திரும்பி வந்தேட்டேனு சொல்லு' - ரஜினிகாந்திடம் பயிற்சி தொடங்கிய பும்ரா - (வீடியோ)

Jasprit Bumrah starts training under Delhi Capitals’ Rajnikanth Sivagnanam - 'நா திரும்பி வந்தேட்டேனு சொல்லு' - ரஜினிகாந்திடம் பயிற்சி தொடங்கிய பும்ரா - (வீடியோ)

முதுகுப் பகுதி காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு கோச் ரஜினிகாந்த் சிவஞானத்திடம் இன்று முதல் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

Advertisment

கடந்த செப்படம்பர் மாதம் பும்ராவுக்கு பந்துவீசும் போது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான தொடரில் பும்ரா விளையாடவில்லை. மேலும், வரும் டிச.6ம் தேதி தொடங்கவுள்ள மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் காயத்தில் இருந்து பும்ரா மீண்டுள்ளதால், அதற்கான முறையான பயிற்சியை இன்று முதல் தொடங்கியுள்ளார். மும்பை கிரிக்கெட் அமைப்புக்குச் சொந்தமான மைதானத்தில் ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ரஜினிகாந்த் சிவஞானத்திடம் பும்ரா பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

2, 2019

ரஜினிகாந்த் சிவஞானத்திடம் பயிற்சி பெறும் வீடியோவையும் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பும்ரா காயம் ஏன்?

பும்ராவின் காயம் குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், "வேகப்பந்து வீச்சின் போது உடலை விட, தனது கையை அதிகமாக பயன்படுத்தி பந்து வீசுகிறார் பும்ரா. இச்செயல் தான் இவரது காயத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் அதிகமாக உடல் எடையை பயன்படுத்துவதால் தான் பல ஆண்டுகள் நீடிக்க முடிகிறது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

பும்ரா, அடுத்த ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மீண்டும் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு ரஜினிகாந்த் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக நியூஸிலாந்தின் நிக் வெப்பை பிசிசிஐ தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர். இதனால், ஐபிஎல் அணிக்கு சிவஞானம் பயிற்சி அளித்து வருகிறார்.

"ஐபிஎல் போட்டிகள் நடக்காத போது, சிவஞானம் யாருக்கு வேண்டுமானாலும் பயிற்சி கொடுக்கலாம். அவர் தான் எங்கள் அணியின் முதன்மை ஆலோசகர். பும்ராவுக்கு அவர் பயிற்சி கொடுப்பது என்பது முற்றிலும், அவர்கள் இரு தரப்புக்கு சம்பந்தப்பட்டது" என்று டெல்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jasprit Bumrah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment