டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி டுமினி ஓய்வு!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஜேபி டுமினி ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தென் ஆப்ரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஜேபி டுமினி அறிவித்துள்ளார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்க அணி வீரரான டுமினி 1984-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். தற்போது 33-வயதாகும் ஜேபி டுமினி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை ஆஃப் பிரக் பந்துவீச்சாள் என தென் ஆப்ரிக்க அணியின் முக்கிய வீரர்களில் ஒருவாராக ஜே.பி டுமினி இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெடில் அறிமுகமானார். தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் (50 ரன்கள் நாட் அவுட்)அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அந்த போட்டியில் 414 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜே.பி டுமினி களம் இறங்கியதே அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி போட்டியாகும். இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேபி டுமினி 74 இன்னிங்சில் 2,103 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கேோர் 166 ரன்கள் ஆகும். ஜே.பி டுமினி தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் எடுத்துள்ளார். இதேபோல, டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் 43 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 47/4 என்பது அவரின் சிறந்த பந்துவிச்சாகும்.

இது தொடர்பாக ஜேபி டுமினி கூறும்போது: முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளேன். தென் ஆப்ரிக்க அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது என்பது மகிழ்ச்சி வாய்ந்தது. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

×Close
×Close