Advertisment

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தது. அரையிறுதியில் ஜெர்மனியை எதிர்கொண்டு நாளை களம் இறங்குகிறது இந்திய அணி.

author-image
WebDesk
New Update
Hockey world cup, World cup hockey, India, Belgium

Junior hockey world cup 2021 India beat Belgium : ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 01/12/2021 அன்று இறுதி மற்றும் நான்காவது கால் இறுதிப் போட்டி நடைபெற்றது. பெல்ஜியம் அணியை எதிர்த்து களம் இறங்கிய இந்திய அணிக்கு இது மிகவும் விறுவிறுப்பான ஆட்டமாக அமைந்தது. 21வது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிறகு, பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட திவாரி அதனை கோலாக மாற்றினார்.

Advertisment

பெல்ஜியம் அணி கோல் அடிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் இந்திய வீரர்கள் தகர்த்தனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தது. ஆட்டத்தின் மூன்றாவது பாதியில் 5 முறை கோல்களை அடிக்க முயற்சி செய்தது பெல்ஜியம். ஆனால் இந்திய அணியினர் மிகவும் நிதானமாக அதே நேரத்தில் விடாப்பிடியாக அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்தனர். ஆனால் இறுதி 15 நிமிடங்களில் அசுரத் தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் “டிஃபென்ஸை” ஆட்டம் காண வைத்தனர் பெல்ஜியம் அணியினர். இருந்த போதும் கோல் கீப்பர் பவனும் முக்கிய ஆட்டக்காரரான ப்ரசாந்த் சௌஹானும் அவர்களின் முயற்சியை தோற்கடித்தனர்.

இந்தியா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் தற்போது அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அரையிறுதியில் ஜெர்மனியை எதிர்கொண்டு நாளை களம் இறங்குகிறது இந்திய அணி. மற்றொரு அரையிறுதிப் போட்டி நாளை ப்ரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. நாளை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் ஐந்தாம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு செல்கின்றன. மூன்றாம் இடத்திற்கான போட்டிகளும் டிசம்பர் ஐந்தாம் தேதி அன்றே நடைபெறுகிறது. அந்த போட்டிகள் மாலை 04.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment