ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த், அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். சீன வீரர் ஷி யுகியை 21-10, 21-14 என்ற செட் கணக்கில் அவர் வென்றுள்ளார். வெறும் 37 நிமிடங்களில் இந்தப் போட்டியில் வென்று அசத்தியுள்ளார் ஸ்ரீகாந்த்.
முன்னதாக, இந்தோனேசிய ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.