KKR vs KXIP 2019 Live Streaming, Kings XI Punjab vs Kolkata Knight Riders
kkr vs kxip 2019 scorecard: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப் பரீட்சையில் குதித்தன. இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம்.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, கடந்த போட்டியில் இடம்பெற்ற வீரர்களே களம் இறங்கினர். அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி ஆண்ட்ரு டை, சாம் குர்ரன் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்தது.
டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டத்தின் பின்பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், பந்து வீச்சை தேர்வு செய்ததாக தினேஷ் கார்த்திக் கூறினார்.