scorecardresearch

‘உங்க ஃபிட்னஸ் போதாது பாஸ்’: கே.எல் ராகுலை விமர்சிக்கும் ‘தோழி’யின் தந்தை

Tamil Sports Update : கே.எல் ராகுலும் சுனில்ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியும் கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cricketer KL Rahul Says Bollywood Actor Sunil Shetty: உங்களுக்கு போதுமான தகுதி இல்லை நீங்கள் அடிக்கடி காயத்தில் சிக்குகிறீர்கள் என்று பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் குறித்து விமர்னம் செய்தது தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சுனில் ஷெட்டி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், 1992-ம் ஆண்டு வெளியான பல்வான் என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், பயில்வான் படத்தின் மூலம் கன்னடத்திலும், தர்பார் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

ஒரு நடிகராக உலகளவில் அறியப்பட்ட சுனில் ஷெட்டி ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. கிரிக்கெட் ரசிகர் என்று சொல்வதை விட, எல்லை மீறிய கிரிக்கெட் வெறியர் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.

சமீபத்திய கௌரவ் கபூருடன் நடந்த பிரேக்பஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நேர்காணலில், பங்கேற்ற கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகர் சுனில் ஷெட்டி வெறும் ரசிகர் மட்டுமல்ல, உண்மையில், கிரிக்கெட்டின் தீவிர வெறி கொண்டவர்” விளையாட்டைப் பற்றிய வாதங்களில் அவருடைய பங்கும் இருப்பதாக ராகுல் கூறியுள்ளார்.

மேலும் எங்களின் சில உரையாடல்கள், சில சமயங்களில் வாதங்கள், கருத்து வேறுபாடுகள் கூட ஆகும். அவர் விளையாட்டை நன்கு புரிந்து வைத்திருப்பதால், புத்திசாலித்தனமாக பேசுகிறார். அப்படி ஒருமுறை அவர் என்னிடம், உங்களுக்கு போதுமான தகுதி இல்லை. நீங்கள் அடிக்கடி காயத்தில் சிக்குகிறீர்கள. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவை  சாப்பிடவில்லை. என்று கூறியதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பயிற்சி பற்றி தெரிவித்ததாக கூறிய ராகுல். 60 வயதிலும் சுனில் ஷெட்டியால் மிகவும் ஃபிட்டாக இருக்க முடியும் என்றால், அவர் தடுமாற எந்த காரணமும் இல்லை என்று கே.எல்.ராகுல் கூறினார். “நீங்கள் அவரை 60 வயதில் பார்க்கிறீர்கள். அவர் மற்றவர்களைப் போலவே தன்னை பொருத்தமானவர் என்று நினைக்கிறார்.

அவர் 60 வயதில் ஒரு செயலை செய்ய முடியும், என்னால் ஏன் செய்ய முடியவில்லை என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ராகுல் கூறியுள்ளார்.

கே.எல் ராகுலும் சுனில்ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியும் கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இருவருமே தங்களது உறவு குறித்து மறுத்தோ அல்லது சம்மதம் சொல்லியோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், இவர்கள் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரத்தான் செய்கிறது.

சுனில் ஷெட்டி கடைசியாக பிரியதர்ஷன் இயக்கிய படமான மரக்கார் அரபிக்கடல் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்துள்ள தெலுங்கு படமான கானி விரைவில் வெளியாக உள்ள நிலையில், நேபாளி மொழியில் இவர் நடித்து வரும் எக்ஸ் நைன் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்க்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kl rahul says girlfriend athiyas father suniel shetty is borderline obsessed with cricket