Advertisment

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: லியாண்டர் பயஸ் புதிய உலக சாதனை!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் பெற்று லியாண்டர் பயஸ் புதிய சாதனை படைத்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: லியாண்டர் பயஸ் புதிய உலக சாதனை!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் பெற்று லியாண்டர் பயஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisment

தியான்ஜின் நகரில் இந்தியா- சீனா அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியா 0-2 என சீனாவிடம் தோல்வி கண்டது.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் - ரோகன்போபண்ணா ஜோடி சீனாவின் மயோ-ஷின் கோங் - டி வு ஜோடியை எதிர்கொண்டது. இதில் சீன இணை மோ க்ஸின் காங்- ஸி ஜாங்கை 5-7 7-6(5) 7-6(3) என்ற இந்திய இணை வென்றது. இதனால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி கிடைத்துள்ளது. இந்த போட்டியின் முடிவில் சீனா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

டேவிஸ் கோப்பையின் இரட்டையர் பிரிவில் பயஸ் இதுவரை 42 வெற்றிகள் பெற்றிருந்தார். இத்தாலியின் நிக்கோலா பைடிரன்கேலியின் சாதனையுடன் சமநிலையில் இருந்தார். இன்றைய வெற்றியின் மூலம் நிக்கோலா சாதனையை முறியடித்து, பயஸ் புதிய சாதனைப் படைத்துள்ளார். லியாண்டர் பயஸ் 1990-ம் ஆண்டு முதல் முதலாக டேவிஸ் கோப்பையில் தனது பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment