Advertisment

Fact Check: U19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் பதிரானா 175kph வேகத்தில் பந்து வீசினாரா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Matheesha Pathirana bowl a 175 kph delivery against India in U19 world cup fact check - Fact Check: U19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் பதிரானா 175kph வேகத்தில் பந்து வீசினாரா?

Matheesha Pathirana bowl a 175 kph delivery against India in U19 world cup fact check - Fact Check: U19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் பதிரானா 175kph வேகத்தில் பந்து வீசினாரா?

கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு ஹெட்லைனை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தற்போது சமூக தளங்களில் விளையாட்டு பிரிவில் இதுதான் ஹாட்.

Advertisment

போட்டாரா? இல்லையா?

உண்மையிலயே இப்படி போட முடியுமா?

இவ்வளவு வேகத்துல போட்டா கை என்னத்துக்கு ஆகுறது?

என்று இப்படியான ஏகப்பட்ட கேள்விகள்.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

அப்படி என்ன தான் போட்டாங்க???

ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பைத் தொடரில், இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, இந்தியாவின் யஷாவி ஜெய்ஸ்வால்-க்கு வீசிய பந்தின் வேகம் மணிக்கு 175 கி.மீ. (108mph) என்ற செய்தி தலையங்கத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்: மனநோய் போராட்டத்தில் பிரவீன் குமார்

அந்த பந்து வைடாக சென்றாலும் மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசி, உலகத்திலேயே அதிவேக பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

17 வயதே ஆன பதிரானா எப்படி இவ்வளவு வேகத்தில் வீசியிருக்க முடியும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தலை சுற்றிப் போக, அவர்களை விட புத்திசாலியான ரசிகர்கள், 'யோவ்... அதெப்படியா இவ்ளோ வேகமா போட முடியும்?' என்று லாஜிக்காக கேள்விகளை முன்வைத்தனர்.

அவர்கள் கேட்டது போலவே, இது மேஜிக் அல்ல... டெக்னிக்கல் மக்கர் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. போட்டியின் போது, ஸ்பீட் கன் என்று அழைக்கப்படும் வேகத்தை அளவிடும் கருவியில் டெக்னிக்கலாக கோளாறு ஏற்பட்டதால், அது வேகத்தை தவறாக காட்ட, வைரலாகி விட்டார் பதிரானா.

ஸோ, மேட்டர் சால்வ்ட்... மிஸ்டரி சால்வ்ட்...

இன்னமும் சோயப் அக்தர் வீசிய 161.3kph வேகம் தான் உலகின் அதிவேக பந்து என்று நம் உச்சி மண்டையில் நட்டு வைக்கப்பட்டிருக்கும் தகவல் தான் உண்மையானது.

2003ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அக்தர் ஜி இந்த வேகத்தில் வீசியிருந்தார்.

ஆஸ்திரேலியாவின் ஷான் டெய்ட் மற்றும் பிரட் லீ ஆகியோர் 161.1kph வேகத்தில் அடுத்த இடங்களில் உள்ளனர்.

ஷான் டெய்ட் 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவும், பிரட் லீ 2005ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் தங்களது வேகத்தை உலகிற்கு காட்டினர்.

அண்டர் 19 போட்டியில், இந்தியாவுக்கு எதிராக தவறான வைரலான பதிரானா 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

காதலியை கரம் பிடித்த கருண் நாயர்: 'ஜில்’ ஆல்பம்

Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment