Advertisment

I. AM. BACK. - மீண்டும் பாக்ஸிங் ரிங்கில் மைக் டைசன்! 2k கிட்ஸ் இப்டி கொஞ்சம் வாங்க

1996ல் மீண்டும் குத்துச்சண்டைக்கு திரும்பிய டைசன், இழந்த பட்டங்களை மீண்டும் பெற்று உலக சாம்பியனாக வலம் வந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
I. AM. BACK. - மீண்டும் பாக்ஸிங் ரிங்கில் மைக் டைசன்! 2k கிட்ஸ் இப்டி கொஞ்சம் வாங்க

இதுவரை 58 சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ள டைசன் அதில் 50 போட்டிகளில் வென்றுள்ளார்

மைக் டைசன்... எனும் பெயர் 85 காலக்கட்டத்தில் பலருக்கும் பீதியையும், பதட்டத்தையும் ஒருசேர ஏற்படுத்திக் கொண்டிருந்தது. குத்துச் சண்டையின் முதல் சுற்றிலேயே எதிர்த்துக் களமிறங்கும் வீரர்களின் முகத்தை, தாடையைக் கிழித்து தொங்க விடுவது இவரது ஸ்டைல். பெறவு, இவரைக் கண்டால் பீதியாகாமல் என்ன செய்வார்கள்!

Advertisment

1985 முதல் குத்துச்சண்டை ரிங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மைக் டைசன். ஆனால், 90களில் அவர் சறுக்கலை சந்தித்தார். பஸ்டன் டக்லஸ், டோனோவன் ரூடாக், ஹோலிபீல்ட் ஆகியோருடன் நடந்த மோதலில் டைசன் தோல்வி அடைந்தார். அவர் தக்கவைத்திருந்த சாம்பியன் பட்டமும் பறிபோனது.

ஐபிஎல் ரசிகர்களுக்கு செப்.19 முதல் ‘ஃபுல் மீல்ஸ்’ ரெடி! நவம்பர் 8 ஃபைனல்

எந்த அளவுக்குப் புகழின் உச்சிக்குச் சென்றாரோ அதே உயரத்துக்கு அவரை சர்ச்சைகளும் பின் தொடர்ந்தன. 1992-ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய டைசன் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார், பின்னர் பரோலில் வெளியேவந்து, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை மாலிக் அப்துல் அஜிஸ் என மாற்றிக்கொண்டார்.

அதேபோல், 1996ல் மீண்டும் குத்துச்சண்டைக்கு திரும்பிய டைசன், இழந்த பட்டங்களை மீண்டும் பெற்று உலக சாம்பியனாக வலம்வந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியிலிருந்து மைக் டைசன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவரை 58 சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ள டைசன் அதில் 50 போட்டிகளில் வென்றுள்ளார், இதில் 44 போட்டிகள் நாக் அவுட்டிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் குத்துச்சண்டை உலகிலிருந்து விலகி இருந்த மைக் டைசன் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க உள்ளார். வரும் செப்டம்பர் 12-ம் தேதி முன்னாள் குத்துச்சண்டை வீரர் ராய் ஜோன்ஸ் ஜூனியுடன் கண்காட்சிப் போட்டியில் மைக் டைசன் மோத உள்ளார். 51 வயதாகும் ராய் ஜோன்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்றவர்.

கலிபோர்னியாவில் உள்ள கார்ஸன் நகரில் உள்ள டிக்னிட்டி ஹெல்த் ஸ்போர்ட் பார்க்கில் இருவருக்கும் இடையிலான போட்டி நடக்கிறது. 8 சுற்றுகள் கொண்டதாக நடக்கும் போட்டி 3 மணிநேரம்வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது.

IPL-ல் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஃபார்முலா – ரசிகர்களிடம் எடுபடுமா?

இது தொடர்பாக மைக் டைசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதுபோன்று வீடியோவையும் வெளியிட்டு, மீண்டும் வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின் குத்துச்சண்டைப் போட்டிக்கு மைக் டைசன் வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Mike Tyson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment