Advertisment

விழித்துக் கொண்டதா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி? 'ஸ்டெடி அன்ட் அக்ரசிவ்' கோச் நியமனம்!

அதேசமயம், முன்னாள் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Misbah-ul-Haq is Pakistan’s new head coach, Waqar Younis as bowling coach - விழித்துக் கொண்டதா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி? 'ஸ்டெடி அன்ட் அக்ரசிவ்' கோச் நியமனம்!

Misbah-ul-Haq is Pakistan’s new head coach, Waqar Younis as bowling coach - விழித்துக் கொண்டதா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி? 'ஸ்டெடி அன்ட் அக்ரசிவ்' கோச் நியமனம்!

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு அண்டர் ஆவரேஜ் என்று சொல்லும் அளவிற்கே இருந்து வருகிறது. அவ்வப்போது எழுச்சி காட்டும் பாகிஸ்தான், அப்படியே பாய் போட்டு சில ஆண்டுகளுக்கு படுத்துவிடும்.

சில முரணான வீரர்கள் தேர்வு, எதிர்கால திட்டமிடல் போன்றவற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சறுக்கியது. இந்த முடிவு, நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சப்தமாகவே எதிரொலித்தது.

இந்நிலையில், முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கை, பாகிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது பாக்., கிரிக்கெட் நிர்வாகம்.

அதேசமயம், முன்னாள் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

களத்தில் முதலில் பொறுமை காட்டி, போக போக அதிரடியில் மிரள வைக்கும் மிஸ்பா, 'ஸ்டெடி கம் அக்ரசிவ்' வீரர் என்றே அழைக்கப்பட்டார். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் காட்டிய பயத்தையும், 2011ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் கடைசி வரை நின்று மிரட்டியதையும் ரசிகர்கள் எவரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட மாட்டார்கள்.

இப்போது அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எழுச்சிப் பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment