வெறும் 60 ரன்கள்; 10 விக்கெட்டுகள் – பாடுபடுத்திய மிட்சல் ஸ்டார்க்! பந்து வர்றதும் தெரியல.. போறதும் தெரியல (வீடியோ)

Sheffield Shield என்பது ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடராகும். ஆஸ்திரேலியாவின் ஆறு மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் இத்தொடரில் விளையாடும். ஆஸ்திரேலியாவின் மிக பழமையான இந்த கிரிக்கெட் தொடர், முதன் முதலில் 1892-93ம் ஆண்டு நடத்தப்பட்டது.  டபுள் ரவுன்ட் ராபின் முறையில் நடத்தப்படும் இத்தொடரில்,…

By: Updated: October 21, 2019, 01:27:40 PM

Sheffield Shield என்பது ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடராகும். ஆஸ்திரேலியாவின் ஆறு மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் இத்தொடரில் விளையாடும். ஆஸ்திரேலியாவின் மிக பழமையான இந்த கிரிக்கெட் தொடர், முதன் முதலில் 1892-93ம் ஆண்டு நடத்தப்பட்டது.


டபுள் ரவுன்ட் ராபின் முறையில் நடத்தப்படும் இத்தொடரில், உலகின் நம்பர்.1 டெஸ்ட் பவுலர் மிட்சல் ஸ்டார்க், வெறும் 60 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக களமிறங்கிய ஸ்டார்க், டாஸ்மானியா அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்ற, இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன் அணியின் வெற்றியை சர்வ சாதாரணமாக்கினார்.


முதல் இன்னிங்ஸில் டாஸ்மானியா – 268

முதல் இன்னிங்ஸில் நியூ சவுத் வேல்ஸ் – 364

இரண்டாவது இன்னிங்ஸில் டாஸ்மானியா – 140

எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூ சவுத் வேல்ஸ் வெற்றி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Mitchell starc 10 wickets for 60 runs in sheffield shield match video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X