IND vs AUS: கொரோனா உறுதியான ஷமி விலகல்… மாற்று வீரர் யார் தெரியுமா?
IND vs AUS 2022: Mohammed Shami Out of Australia Series After Testing Positive For Covid Tamil News: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Mohammad Shami - IND vs AUS 2022 Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி வரும் 20-ஆம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. 2-வது போட்டி நாக்பூரில் 23-ஆம் தேதியும், கடைசி மற்றும் 3-வது போட்டி 25 ஆம் தேதி ஐதராபாத்திலும் நடக்கிறது.
Advertisment
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. சமீபத்திய சர்வதேச போட்டிகளில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த முகமது ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
மாற்று வீரர் சேர்ப்பு…
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார்.
34 வயதான உமேஷ் யாதவ் கடைசியாக பிப்ரவரி 2019ல் இந்தியாவுக்காக டி20 ஐ விளையாடி இருந்தார். எனினும், ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் கடந்த சீசனில் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரரானார். மேலும் பவர்பிளேயில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார்.