Advertisment

மின்னல் வேகம், துல்லியமான பந்துவீச்சு… கவுண்டி கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்த சிராஜ்!

Mohammed Siraj 5 wickets haul for Warwickshire against Somerset in County Championship Division One Tamil News: இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில், வார்விக்‌ஷர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கி பந்துவீச்சு தாக்குதல் தொடுத்த சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Mohammed Siraj takes 5 wickets on county debut Warwickshire vs Somerset

Mohammed Siraj - Warwickshire vs Somerset, County Div 1

Mohammed Siraj Tamil News: நடப்பு ஆண்டுக்கான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்து மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 12 ஆம் தேதி முதல் பர்மிங்காமில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் வார்விக்‌ஷிர் - சோமெர்செட் அணிகள் மோதி விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சோமெர்செட் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 219 ரன்கள் எடுத்தது.

Advertisment

இதனையடுத்து, முதல் இன்னிங்சில் ஆடிய வார்விக்‌ஷிர் அணி 196 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது 2 விக்கெட்டுகளை இழந்துள்ள சோமெர்செட் அணி 13 ரன்கள் எடுத்து, 36 ரன்கள் முன்னிலையில் இருந்து வருகிறது.

5 விக்கெட்களை சாய்த்த சிராஜ்…

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான முகமது சிராஜ், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில், வார்விக்‌ஷர் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டுள்ளார். தனது முதலாவது ஆட்டத்திலே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர், சோமெர்செட் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸ் முடிவில் 82 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தற்போது நடந்து வரும் 2வது இன்னிங்சிலும் அவர் ஒரு விக்கெட்டை சாய்த்துள்ளார். மீதமுள்ள ஆட்ட நேரத்திலும் சிராஜ் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னைத் தானே பட்டை தீட்டி வரும் சிராஜ்…

publive-image

28 வயதான இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய டி-20 அணியில் அறிமுகமானார். அவரின் துல்லியமான பந்துவீச்சு அவர் 2020 ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க உதவியது. தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராகவும் உருவெடுத்துகிறார். அவர் 13 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

publive-image

இந்திய டி20 கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வார்விக்ஷயர் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் தனது திறமையை மெருகேற்றி வருகிறார். அவருக்கு நடப்பு உலக கோப்பை தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைவில்லை. இதனால், அவர் தன்னைத் தானே பட்டை தீட்டி வருகிறார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

England Sports Cricket Mohammed Siraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment