'நான் எனது குடும்பத்துடன்!' - மிகப்பெரிய பிரஷருக்கு முன் மகிழ்ச்சியை பகிர்ந்த தோனி!

தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

மகேந்திர சிங் தோனி, தனது குடும்பத்துடன் நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடைபெற்று வரும் நிடாஹஸ் முத்தரப்பு டி20 தொடரில், தோனி பங்கேற்கவில்லை. கோலி, பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்களுக்கு பிசிசிஐ தானாகவே விடுப்பு அளித்தது. தோனியைப் பொறுத்தவரை அது அவரது முடிவு என்று கூறியிருந்தது. தோனியும், தனக்கு முத்தரப்பு தொடரில் இருந்து பங்கேற்க விலக்கு அளிக்க வேண்டும் கேட்டிருந்தார். இதற்கு அனுமதியளித்த பிசிசிஐ, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், தினேஷ் கார்த்திக்கை விக்கெட் கீப்பராக நியமித்து அனுப்பியது.

இந்த நிலையில், தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணம்” என்று கேப்ஷன் இட்டுள்ளார். இதனை, ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.

Fun time with the family

A post shared by @ mahi7781 on

ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குவதால், ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அணியில் வாட்சன், ஹர்பஜன் உட்பட பல புதிய வரவுகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, மீண்டும் ஒரு அணிக்கு தோனி தலைமை பொறுப்பை ஏற்கவிருப்பதால்,  அதனைக் காணவே ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே அணியை மீண்டும் தோனி வழிநடத்த இருக்கும் நிலையில், அவர் தற்போது தனது குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close