Advertisment

40 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு… வைரலாகும் சிஎஸ்கே கேப்டனின் வீடியோ!

IPL 2022: 40-Year-Old CSK captain MS Dhoni’s 'Jacked-Up Physique' video goes viral in social media Tamil News: கட்டுமஸ்தானாக வலம் வரும் கேப்டன் தோனியின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
MS Dhoni Tamil News: 40-Year-Old Dhoni's 'Jacked-Up Physique' video goes viral

MS Dhoni Tamil News: 15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் - 2022) தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறவுள்ளது.

Advertisment

ஐபிஎல் தொடர் துவங்க 16 நாட்கள் உள்ள நிலையில், தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளும் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் உள்ள லாலா பாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

publive-image

எம்.எஸ்.தோனி

வழக்கம் போல தொடருக்கு முன்னதாகவே பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணியின் கேப்டன் தோனி வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மேலும், அணியில் புதிதாக இணைந்துள்ள இளம் வீரர்களுக்கு அறிவுரைகளை வழங்கியும் வருகிறார்.

கேப்டன் எம்.எஸ்.தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அவர் ஒரு கையில் பேட்டை பிடித்த வண்ணம் சிக்ஸரை பறக்க விட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியது.

ms dhoni, chennai super kings, ipl 2022, ms dhoni one handed six

இந்நிலையில், 40 வயதான விக்கெட் கீப்பர் பேட்டரான கேப்டன் தோனியின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் உடம்பை கட்டுமஸ்தான் போல வைத்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

மேலும் லைக்ஸ்களை அள்ளி குவித்து வரும் இந்த விடியோவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்தும் வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர், "தல தோனி நமக்கு சில தீவிர உடற்பயிற்சி இலக்குகளை வழங்கியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகரோ, "பீஸ்ட் அட் 40'ஸ்" என்றுள்ளார். இன்னும் ஒரு ரசிகர், "இப்போது உடற்பயிற்சி (பிட்னஸ்) பற்றி பேசுங்கள்" என்று கூறியுள்ளார்.

74 போட்டிகள்; 4 மைதானங்கள்

இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. இதனால், இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் (70 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளேஆஃப் போட்டிகள்) விளையாடப்பட உள்ளன. இதில் மதியம் 3:30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியுடன் மொத்தம் 12 இரண்டு போட்டிகள் கொண்ட ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்தியாவில் இன்னும் கொரோனா தொற்று அச்சம் நிலவி வருவதால் இம்முறை ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் அரங்கேறுகின்றன. இதில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் மற்றும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா, நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் ஆகிய நான்கு மைதானங்களும் அடங்கும்.

ஐபிஎல் 2022 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை பின்வருமாறு:

CSK vs KKR, மார்ச் 26 - 7.30 pm IST - மும்பை வான்கடே

CSK vs LSG, மார்ச் 31 - 7.30 pm IST - பிரபோர்ன்

CSK vs PBKS, ஏப்ரல் 3 - 7.30 pm IST - பிரபோர்ன்

CSK vs SRH, ஏப்ரல் 9 - 3.30 pm IST - டிஒய் பாட்டீல்

CSK vs RCB, ஏப்ரல் 12 - 7.30 pm IST - டிஒய் பாட்டீல்

CSK vs குஜராத் ஏப்ரல் 17 - மாலை 7.30 மணி IST - புனே

CSK vs MI, ஏப்ரல் 21- மாலை 7.30 மணி IST - டிஒய் பாட்டீல்

CSK vs PBKS, ஏப்ரல் 25 - 7.30 pm IST வான்கடே

CSK vs SRH, மே 1 - மாலை 7.30 மணி IST - புனே

CSK vs RCB, மே 4 - மாலை 7.30 மணி IST - புனேயில்

CSK vs DC, மே 8 - 7.30 pm IST - டிஒய் பாட்டீல்

CSK vs MI, மே 12 - 7.30 pm IST வான்கடே

CSK vs GT, மே 15 - 3.30 pm IST வான்கடே

CSK vs RR, மே 20 - 7.30 pm IST - பிரபோர்ன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Super Kings Sports Cricket Ipl Cricket Ms Dhoni Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment