Advertisment

எல்லைகளைக் கடந்த காதல்… மாநிலம், மொழியைத் தாண்டி ஐபிஎல் ஹீரோவாக தோனி உருவாகியது எப்படி?

emotional bond between Chennai Super Kings’s (CSK) captain MS Dhoni and the fans of the club Tamil News: தோனி தொடர்களில் வெற்றி பெற்றார், கோப்பைகளை குவித்தார் மற்றும் அவரது அந்த அன்பான புன்னகையுடன் சிரித்தார்.

author-image
WebDesk
New Update
MS Dhoni Tamil News: How the image of the IPL hero Dhoni rose above city limits

MS Dhoni Tamil News: 10 அணிகள் கொண்ட போட்டி, 70 ஆட்டங்கள், இரண்டு ஹோஸ்ட் நகரங்கள், மாறிவரும் கார்ப்பரேட் ஆர்வம், வீரர்களுக்கான டி20 உலகக் கோப்பை ஆடிஷன் களம் மற்றும் கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான போட்டியாக வளர்ந்து வரும் ஒரு தொடர் என ஐபிஎல்-2022 பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். கிரிக்கெட்டின் பணக்கார லீக்காக வலம் இத்தொடருக்கான கவுண்ட்டவுன் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கம் இந்த சீசன் குறித்த தனித்துவமான கட்டுரைகளை வழங்கி வருகிறது. அதில் இன்று, ஐபிஎல் எப்படி ஒரு உள்ளூர் பகுதியை கவனம் செலுத்துவதை தாண்டியது என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisment

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் ஒரு பிரமாண்டமான மற்றும் விரிவான விழாவாக நடந்தது. இதில் தமிழ் திரையுலகினர், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாலையில் நடத்த இந்தவிழா மிகப் பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தியது. தைவானிய ஜோடியின் அக்ரோபாட்டிக் நிகழ்ச்சி, ரஷ்ய கலைஞரின் லேசர்-எஃபெக்ட்ஸ் ஷோ என நிகழ்ச்சி பட்டையை கிளப்பியது.

இதற்கு மத்தியில் ஒரு எளிய வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் சாம்பல் நிற ஜீன்ஸ் அணிந்த ஒரு இளைஞர் சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். அவர் தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் சற்று வேடிக்கையாகப் பார்த்த அவரது முகத்தில் ஒரு சிறுவனின் சிரிப்பு மினுமினுத்தது. அது ஜெர்சி வெளியீட்க்கான காத்திருப்பையும் ரசிகர்களிடையே மறைத்தது. சில நாழிகைகளில், தோனி தான் அணிந்திருந்த வெள்ளை நிற டி-ஷர்ட் மேல் அந்த மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து, சென்னை அணியின் ஜெர்சியை வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தோனியிடம், “உங்கள் நேரம் முடிவதற்குள் நீங்கள் ரசிகர்களிடம் தமிழில் பேசி இருப்பீர்கள்” என்ற வரியுடன் மைக்கை அவரிடம் ஒப்படைத்தார். தோனி புன்னகையுடன், "அதைப் பற்றி தெரியாது, ஆனால் நான் உங்களுக்கு கோப்பைகளை வெல்ல முயற்சிக்கிறேன்," என்று கூறினார், அவர் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு, சஸ்பென்ஸை உருவாக்கி, அடர்த்தியான இந்தி உச்சரிப்பில் "ரொம்பா நந்த்ரி (நன்றி)." கூற, கைதட்டல்கள் காதை பிளந்தன.

தற்போது "தல" என்கிற உயரிய அந்தஸ்தை அவருக்கு ரசிகர்கள் வழங்கியுள்ளனர். இது ஒரு கிரிக்கெட் வீரருக்கும், சென்னை அணியின் ரசிகர்களுக்கும் இடையிலான ஆழமான உணர்ச்சிபூர்வமான பிணைப்பு. இதுதான் உள்ளூர் கிரிக்கெட் ஹீரோவின் இடமாற்றமும் ஆகும். உள்ளூர் கிரிக்கெட் ஹீரோ என்பவர், அந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவருக்கென தனிக்கூட்டம் இருக்க வேண்டும். வெகுஜன மக்களிடம் அவர் அறிமுகமாகிவராக இருக்க வேண்டும்.

தோனியைப் பொறுத்தவரை, அவர் அனைத்தயும் கடந்தவராக தான் தென்பாட்டார். தனது வெற்றி, கவர்ச்சி மற்றும் அவரது ஆளுமையின் சுத்த காந்தத்தன்மை ஆகிய இரண்டையும் கொண்டு, தன் மீது உலகம் கொண்டிருந்த மற்றொரு கட்டுக்கதையையும் உடைத்தார். அதுமுதல் சென்னை அணியின் மேலாதிக்கம் தொடங்கியது. இந்தியன் பிரீமியர் லீக்கில் வணிக மாதிரியின் அடிப்படையிலும், வெற்றி பெறும் விகித அடிப்படையிலும் மிகவும் திறமையான ஒரு அணி என்ற புகழோடு தற்போது வலம் வருகிறது.

publive-image

பரிணாமம்

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பாலான உரிமையாளர்கள் நீண்ட காலமாக உள்ளூர் வீரர்களுடன் தங்களுடைய ஃபிக்ஸேஷனைக் கைவிட முடிவு செய்துள்ளார்கள். வெற்றி மற்றும் சார்புடையதுதான் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர். பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் எங்கிருந்து வந்தாலும், யாருக்காக விளையாடினாலும் உணர்ச்சிவசப்பட்ட தொடர்பை உருவாக்க முடியும் என்கிற மனநிலையை தற்போது தான் பெற்று உள்ளனர்.

அந்த வகையில், உரிமையாளர்கள், மாநிலத்தில் உள்ள பிரபல வீரர்களை தேடுவதை தவிர்த்து விட்டு தேசிய அளவில் பிரபலமான வீரர்களை தேடி வருகிறார்கள். இது அவர்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படியாகும். ஒரு நகரம் அல்லது மாநிலத்தின் பெயரை அவர்கள் எடுத்திருந்தாலும், அவர்கள் அதை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை உணர்ந்ததன் ஒரு பகுதி இது ஆகும்.

ஒரு கிளப் அணி என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு. இவைகள் பிராந்திய உறவுகளால் பிணைக்கப்படவில்லை மற்றும் ஆழமான வேரூன்றிய மரபுகளை கடைபிடிப்பதில்லை. எனவே தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் விராட் கோலியை வாங்குவதில் விருப்பம் காட்டவில்லை. கோலி டெல்லியைச் சேர்ந்தவர். சிறுவயது முதலே அங்குதான் விளையாடியவர். இதேபோல் தான் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அம்மாநில வீரரான தேவ்தத் படிக்கல் முதலில் வாங்க விருப்பம் காட்டவில்லை அவர் மிகவும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களில் ஒருவர் என்பதில் ஆச்சரியமில்லை. மேலும், அந்த அணியின் நகரைச் சேர்ந்த கே.எல் ராகுலுக்கு அணி அதிக விலை கொடுக்கவில்லை.

மற்றும் ஓர் உதாரணமாக, மும்பையில் தனது அனைத்து கிரிக்கெட்டையும் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், ரஞ்சி டிராபியில் தனது மாநில அணிக்கு கேப்டனாக இருந்தார். ஆனால், அவர் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்தார். இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த இருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி, இப்போது லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தும் ராகுலுக்கும் அப்படித்தான்.

publive-image

குஜராத் லயன்ஸ் அணியின் முகமாக இருந்த சுரேஷ் ரெய்னாவைப் பற்றி புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் கவலைப்படவில்லை. பதில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. தொழில்நுட்ப ரீதியாக, அவர் பரோடாவைச் சேர்ந்தவர். ஆனால் சேட்டேஷ்வர் புஜாரா அல்லது ஜெய்தேவ் உனட்கட்டை அந்த அணி நிர்வாகம் வாங்க முன்வரவில்லை.

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 200 உள்நாட்டு வீரர்களில் 46 வீரர்கள் அந்தந்த மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளில் இடம்பிடித்து இருந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 19 ஆக மாறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமே அவர்களின் நகரத்திலிருந்து கேப்டனை பெற்ற அணியாக இருக்கிறது. ஆனால், அவர் ஓய்வு பெற்றவுடன், அந்த அணி வேறொரு நகரைச் சேர்ந்தவரை கேப்டனாக தேர்ந்தெடுப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

உள்ளூர் ஆட்டக்காரர்களை கொண்ட அணியாக இருந்தது மலையேறிப்போய்விட்டது. அதைத்தடுக்கவும் முடியாது. ஏனெனில் நாட்டில் கிளப் கலாச்சாரம் முதன்மையாக ஒரு நகர்ப்புற நிகழ்வு ஆகும். அதை தோனியும், சிஎஸ்கேவும் விரைவுபடுத்தியுள்ளன.

ஐபிஎல் தொடரில் முதன்முறையாக ஃபிரான்சைஸ்-ஐகான்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது நகர கிரிக்கெட் வட்டாரங்களில் புலம்பல் அலை வீசியது. சில அணிகளிடம் பெரிய முகங்கள் இல்லை. ஆனால், மற்ற அனைத்து கிரிக்கெட் அணிகளும் தங்களுடையது என்று அழைக்கக்கூடிய முகத்தைக் கொண்டிருந்தன. மும்பையில் சச்சின் டெண்டுல்கர் இருந்தார்; கொல்கத்தா அணிக்கு சவுரவ் கங்குலி; பெங்களூரு அணிக்கு ராகுல் டிராவிட் மற்றும் ஹைதராபாத் அணிக்கு விவிஎஸ் லட்சுமண் என இந்திய முழுதும் அறிமுகமான முகங்கள் இருந்தன.

இது ஒரு பெருமைமிக்க கிரிக்கெட் கலாச்சாரத்தில் ஈகோவை வெடிக்கச் செய்தது. தமிழ்நாட்டு கிரிக்கெட்டின் வெளிப்படையான மரணம், சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க இயலாமை போன்றவற்றுக்கு இரங்கல் தெரிவிக்க, வெர்னாகுலர் நாளிதழ்கள் பெரிய தலையங்கத்திற்கு இடம் ஒதுக்கியது. ஒரு நாளிதழ் கிரிஸ் ஸ்ரீகாந்தின் கார்ட்டூனையும் வரைந்து, ‘நான் ஒரு ஐகான் பிளேயராக முடியும், என் காலத்தில் நான் டுவென்டி-டுவென்டி கிரிக்கெட் ஆடியவன்' என்று குறிப்பிட்டது.

போட்டி கிளப் கலாச்சாரம் என்ற கருத்து புதிதாக இருந்த நாட்கள் அவை. நாட்டில் எல்லா இடங்களிலும் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்கள் நேசிக்கப்பட்டு கடவுளாக மதிக்கப்பட்டாலும், உள்ளூர் நட்சத்திரங்கள் ஒரு ஆழமான தொடர்பை ஏற்படுத்தி இறந்தனர். மேலும் சில நேரங்களில் வேறு நகரம் அல்லது மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு சூப்பர் ஸ்டாருக்கு விரோதமாக இருந்தனர். சச்சின் டெண்டுல்கரை எவ்வளவு நேசித்தாலும், கொல்கத்தாவில் இருப்பவர்கள் சவுரவ் கங்குலியை அதிகம் நேசித்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டின் அரசியல் புவியியலிலும் தங்கள் தசைகளை நெகிழச் செய்த காலமாகும்.

publive-image

ஆனால் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் (நிர்வாகிகள்) வேறுவிதமாக நினைத்தார்கள். அவர்கள் முக்கியமாக வணிகச் சொற்களைப் பற்றியே சிந்தித்தார்கள், அவர்கள் புத்திசாலித்தனமான வணிகர்கள் என்றால் மிகையாகாது. "நாங்கள் எந்த ஐகான் வீரர்களுக்கும் செல்லவில்லை, ஏனென்றால் அவர்கள் ஏலத்தில் அணியின் அதிக சம்பளம் வாங்கும் வீரரை விட ஐகானுக்கு 10 சதவீதம் அதிகமாக செலுத்த வேண்டியிருந்தது" என்று சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என் சீனிவாசன் ஒருமுறை கூறியிருந்தார்.

இது தான் ஏலத்தில் மிகவும் விலை உயர்ந்த வீரராக இருந்த தோனியை ஏலத்தில் எடுக்க அவர்களுக்கு உதவி இருந்தது. “எனவே, தோனிக்கான ஏலம் நடந்தபோது, ​​எந்த விலையிலும் நான் தெளிவாக இருந்தேன், எம்எஸ் தோனியின் விலை 1.5 மில்லியன் டாலர்கள் என என்று வந்தபோது, ​​சச்சினுக்கு 1.65 மில்லியன் டாலர்கள் மற்றும் தோனிக்கு 1.5 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் உணர்ந்தார்கள். ஐந்து மில்லியன் பர்ஸ் மற்றும் பர்ஸில் 60 சதவிகிதம் இந்த இரண்டு வீரர்களுக்குச் செல்லும். எனவே, அவர்கள் தோனியை ஏலம் கேட்பதில் இருந்து நிறுத்தினார்கள், ‘எனக்கு ஐகான் வேண்டாம்’ என்று நான் சொன்னதால் தோனியைப் பெற்றோம், ”என்று சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.

தோனி பல நிலைகளில் ஒரு கூர்மையான முதலீடு. அவர் இளமையாக இருந்தார், ஐசிசி உலக டி20 தொடரை ஒரு கேப்டனாக வென்றார், தேசிய அணியின் முழு கட்டுப்பாட்டையும் அவர் ஒப்படைத்தார், நாட்டில் மிகவும் சந்தைப்படுத்தக்கூடிய முகமாக இருந்தார் மற்றும் அவரது பங்குகள் உயர்ந்தன. மாறாக, ஐகான்-பிளேயர்கள் பெரும்பாலும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். அந்த ஆண்டின் இறுதியில் கங்குலி ஓய்வு பெறவிருந்தார்; லக்ஷ்மனால் டி20 பேட்டிங் குறியீட்டை சரியாக உடைக்க முடியவில்லை; டிராவிட் முயற்சித்தார்; ஐகான்களில் டெண்டுல்கர் மற்றும் சேவாக் மட்டுமே திகைக்க வைத்தனர். முதல் சீசனின் முடிவில், பெரும்பாலான ஐகான்கள் தங்கள் உரிமையாளர்களுக்கு ஒரு சுமையாக மாறிபோயிருந்தனர். மேலும் 2010 ஆம் ஆண்டில் டெண்டுல்கர் மற்றும் சேவாக் மட்டுமே அவர்களது கிளப்பில் இருந்தனர்.

அவர்களது புலம்பல் சென்னை அணியை நேசித்தவர்களுக்கு இப்போது மெல்லிசையாக மாறி இருந்தது.

publive-image

தோனியை சென்னை அணி ஒரு வலிமையான முகமாக கட்டமைத்துக்கொண்டது போல், ஒவ்வொரு உரிமையாளரும் தங்களுடைய அணிக்கு தோனி போல் ஒருவரை விரும்புகிறது. இதில் கோலியிடம் ஒன்றை கண்டுபிடித்துவிட்டதாக ஆர்சிபி நினைத்தது. 2011 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்ற உடனேயே, அவர் 3 ஃபார்மெட்டுகளிலும் முழுவதும் நாட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக ஆனார். விரைவில், அவர் டெஸ்ட் கேப்டனாகவும், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஆனார்.

மயங்க் அகர்வால் அல்லது ராகுலை உற்சாகப்படுத்துவதை விட பெங்களூர் ரசிகர்கள் அவரைத் தேடி அலைந்தனர். டெஸ்ட் போட்டிகளின் போது கூட, அவர்கள் பார்க்க விரும்புவது கோலி பேட் அல்லது கோலி களமிறங்குவதை மட்டுமே. போட்டியின் போது ஆடுகளத்தில் அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு மைதானத்திற்குள் புகுந்து விடுகிறார்கள். அவரிடம் செல்ஃபி எடுப்பதற்காக காவலர்களிடம் அடி வாங்குவதையும், லாக்-அப்புகளில் அடைக்கப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்திக் கொள்வதில்லை.

ஆனால் இன்னும் கோலி-மேனியா தோனி-மேனியாவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தோனியிடம் சென்னை அணியும் தன்னிச்சையான பாசம் இல்லை. நகரங்களுக்கு இடையிலான கலாச்சார வேறுபாடுகள் இருக்கலாம். பெங்களூரு மிகவும் காஸ்மோபாலிட்டன் மற்றும் நடைமுறைக்குரியது. சென்னை இன்னும் பழமைவாத மற்றும் காதல் மாறாமல் உள்ளது. சென்னை இன்னும் தெய்வமாகிறது; புதிய கால பெங்களூரு மிகவும் எதிர்மறையாக உள்ளது.

ஹீரோக்களை ஏற்றுக்கொள்வதில், சென்னையை விட மற்ற மாநிலங்கள் அல்லது நகரங்கள் பின்தங்கியே உள்ளன. மிகவும் பிரபலமான நடிகர் தமிழரல்லாதவர் (ரஜினிகாந்த்); மிகவும் சிலை செய்யப்பட்ட ஹீரோ-அரசியல்வாதி தமிழரல்லாதவர் (எம்.ஜி. ராமச்சந்திரன்); தோனிக்கு முந்தைய காலத்தில் மிகவும் விரும்பப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் (சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் மற்றும் சச்சின் டெண்டுல்கர்) தமிழர்கள் அல்லாதவர்கள்.

கோலியை விட தோனி மிகவும் வெற்றிகரமானவர் என்பதற்கு ஒரு காரணம், அவர் அணிக்காக பெற்ற வெற்றிகளே. தோனி தனது சென்னை அணியை நான்கு ஐபிஎல் வெற்றிகளுக்கும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் வெற்றிகளுக்கும் வழிநடத்தியுள்ளார். ஆனால் கோலி ஆர்சிபி அணிக்காக ஒரு சில்வர் கோப்பை கூட வெல்லவில்லை. இதனால் தான் என்னவோ தோனிக்கு நாளுக்கு நாள் ரசிர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

publive-image

ஆனால் வெற்றி மட்டுமே இனம்புரிய காதலுக்கு உத்தரவாதம் அளிக்காது. கெளதம் கம்பீர் கொல்கத்தா அணிக்காக இரண்டு பட்டங்களை வென்றார். அவர் தோனி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் அன்பை பெறவில்லை. அவர் அந்த அணியை விட்டு சென்றதும் கொல்கத்தா அணி அழவில்லை, புலம்பவில்லை. எனவே, இது ஒருவர் வென்ற கோப்பைகளின் எண்ணிக்கை அல்லது ஒருவர் அடித்த ரன்களின் எண்ணிக்கையை விட தெளிவாக அதிகமாக உள்ளது. ஆனால் குறைவான உறுதியான ஒன்று, மேலும் பிராந்தியம் அல்லது நகரம் சார்ந்த ஒன்று.

தோனி தனக்கான ரசிகர்களை பெற எந்த வித்தையிலும் ஈடுபடவில்லை. தினமும் பொது வெளியில் வரவில்லை, வேஷ்டி அணிந்து வரவில்லை, தமிழ்ப் பாடல்கள் பாடவில்லை, தமிழ்த் திரைப்படங்களில் கேமியோவில் நடிக்கவில்லை, சிஎஸ்கே மீது தான் கொண்ட அன்பை, காதலை உரக்கச் சொல்லவில்லை. அவரிடம் செயற்கைத்தனத்தின் திரை இல்லை. எல்லாம் சீராகவும் இயல்பாகவும் இருந்தது. அவர் தொடர்களில் வெற்றி பெற்றார், கோப்பைகளை குவித்தார் மற்றும் அவரது அந்த அன்பான புன்னகையுடன் சிரித்தார்.

சென்னை அணிக்கு வேலை செய்தது டெல்லி அணிக்கு வேலை செய்யாமல் போகலாம். அதுபோல் தான் எல்லா அணிகளுக்கும். கிரிக்கெட்டில் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான அடுக்குகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு உரிமையாளர்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது தற்செயலாக நடந்திருக்கலாம். தோனிக்கும் வெகுஜன மக்களும் ஒரு க்ளிக் ஆகிவிட்டது.

ஆனால், ஐபிஎல் லீக் உள்ளூர் வீரர்களை ஐகான்களாக ஒதுக்குவதில் இருந்து வெகுதூரம் பயணித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மாநில அடையாளங்களிலிருந்து லீக் அதன் பார்வைகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த மாற்றத்திற்கு தோனி மிகப்பெரிய ஊக்கியாக இருக்கலாம். அவர் தனது ரசிகர் பட்டாளத்துடன் தமிழில் உரையாடாமல் இருக்கலாம், பேசாமல் இருக்கலாம், ஆனால் மாநில மற்றும் மொழித் தடைகளைத் தாண்டி ஐபிஎல் ஹீரோ என்ற கருத்தை தனது சொந்த உருவத்தில் மாற்றியமைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ms Dhoni Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment