Advertisment

’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ - வைரலாகும் தோனியின் படம்!

ஜனவரி 16 ஆம் தேதி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எம்.எஸ்.தோனியை ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MS Dhoni

MS Dhoni

Mahendra Singh Dhoni : கிரிக்கெட் பிடிக்காதவர்களையும், தனது தனித்துவமான ஸ்டைலால் ரசிக்க வைத்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் தனது மனைவி சாக்‌ஷியுடன் மத்திய பிரதேசத்திலுள்ள கன்ஹா தேசிய பூங்காவை விசிட் செய்தார். அங்கிருந்த ஒரு புலியை படம் பிடித்த தோனி, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதோடு அந்த பார்க்கின் விசிட்டைப் பற்றி, ‘அவுட் ஸ்டாண்டிங்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisment

 

View this post on Instagram

 

When u spot the tiger on ur own and he obliges u with just enough time to click a few pics.Visit to kanha was outstanding

A post shared by M S Dhoni (@mahi7781) on

தமிழகம் முழுவதும் நள்ளிரவில் பரபரப்பைக் கிளப்பிய குடியுரிமை எதிர்ப்புப் போராட்டம்

ஒரு ரசிகர், ‘புலியே புலியை படம் எடுத்திருக்கிறது’ என கமெண்ட் போட்டிருந்தார். அந்தப் பதிவு பெருமளவு ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வைரலானது. ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருடன் மாலத்தீவு பயணத்தில் தோனி இருந்த படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில் அவர்கள் இருவருக்கும் பானி பூரி பரிமாறிக் கொண்டிருந்தார் தோனி.

ஜனவரி 16 ஆம் தேதி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எம்.எஸ்.தோனியை ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. தோனியைத் தவிர, தினேஷ் கார்த்திக் மற்றும் கலீல் அகமது ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. 2019 ஆம் ஆண்டில் நியூசிலாந்திடம் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி கண்டது. அதன் பிறகு வேறெந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார் தோனி. மார்ச் 29 ஆம் தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தவுள்ள தோனி, மீண்டும் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahendra Singh Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment