தோனி யுக்தியால் முடிந்த பாகிஸ்தான் விதி – சூப்பர் ஓவர் ‘சீக்ரெட்ஸ்’ பகிரும் உத்தப்பா

2007 டி20 உலகக் கோப்பைத் தொடரை நம்மால் மறக்க முடியுமா என்ன!? அதிலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஆட்டம் டை ஆக நடந்த சூப்பர் ஓவர் இந்திய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நீங்கா நினைவாக இடம்பெற்றிருக்கும். ‘எனது பவுன்ஸ் பந்தை சச்சின் சிக்ஸ் அடிக்க விரும்பினேன்’ – நல்லவர்…

By: May 21, 2020, 6:33:41 PM

2007 டி20 உலகக் கோப்பைத் தொடரை நம்மால் மறக்க முடியுமா என்ன!?

அதிலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஆட்டம் டை ஆக நடந்த சூப்பர் ஓவர் இந்திய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நீங்கா நினைவாக இடம்பெற்றிருக்கும்.

‘எனது பவுன்ஸ் பந்தை சச்சின் சிக்ஸ் அடிக்க விரும்பினேன்’ – நல்லவர் சோயப் அக்தர் பேட்டி

இப்போது உள்ளது போல் பேட்டிங் சூப்பர் ஓவர் அல்ல… பவுலிங் சூப்பர் ஓவர். அந்தப் போட்டியில் வென்றது குறித்து 13 வருடங்களுக்குப் பிறகு உத்தப்பா தற்போது மனம் திறந்துள்ளார்.

“அந்தப் போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், வழக்கமாக விக்கெட் கீப்பர் ஸ்டெம்புக்கு பின்னே நிற்கும் இடத்தில் தான் நின்றார். ஆனால், தோனி வேறு மாதிரியாக யோசித்தார். தோனி ஸ்டெம்புக்கு பின்புறம் வலது பக்கமாக நின்றார்.

இதனால், பந்துவீசிய எங்களுக்கு இலக்கு மிகவும் எளிதாகப் போனது. அதாவது. பந்தை தோனி நோக்கி வீச வேண்டும் என்பதே எங்கள் கான்செப்ட். அப்படியே பந்தை வீசினோம். பந்து ஸ்டெம்ப்பை தாக்கியது. போட்டியில் வென்றோம்.


பந்து வீச்சுக்கு தங்களது வழக்கமான பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்த பாகிஸ்தானுக்கு அதிக அதிர்ஷ்டம் இல்லை, முதல் மூன்று வீரர்களான யாசிர் அராபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி – அனைவருமே ஸ்டம்புகளை நோக்கி வீசவில்லை. வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் உத்தப்பா ஆகியோரை இந்தியா பந்து வீச வைத்தது. அவர்கள் அனைவரும் ஸ்டம்புகளைத் தாக்கினர்.

அண்ணன் அடித்தால் அடி; இடித்தால் இடி; மிதித்தால் மிதி – 30 நொடிகளில் பஞ்சரான பாகுபலி (வீடியோ)

“வெங்கடேஷ் பிரசாத் (இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளர்) அப்போது எங்கள் அணியில் மிகச்சிறந்த வகையில் செயல்பட்டார். அவர் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தார், இந்த சூழ்நிலைக்கு அவர் எங்களை தயார்படுத்தினார். வார்ம் அப்களில், நாங்கள் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தோம், ஒவ்வொரு முறையும் நாங்கள் ஸ்டெம்ப்புகளை தாக்கினோம். ஆனால், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அந்த சூழலுக்கு தயாராகவில்லை என்பதை அங்கு காண முடிந்தது என்று உத்தப்பா தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ms dhonis strategy india win 2007 bowl out vs pakistan uthappa cricket news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X