டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு! மூன்று அறிமுகங்கள்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. செஞ்சூரியனில் வரும் 16ம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது.

அதன்பிறகு, இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி வரும் ஞாயிறன்று ஜோகன்னஸ்பெர்க்கில் நடக்கிறது. இந்த நிலையில், இத்தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டுமினி தலைமையிலான அந்த அணியில், டி வில்லியர்ஸ், ஃபர்ஹான் பெஹார்டீன், ஜூனியர் டாலா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜோன்கர், ஹெய்ன்ரிச் க்ளாசீன், டேவிட் மில்லர், க்ரிஸ் மோரிஸ், டேன் பேட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, ஆண்டில் பெலுக்வாயோ, ஷம்சி, ஜோன் – ஜோன் ஸ்மட்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக டு பிளசிஸ், டி காக் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. ஆம்லா, மார்க்ரம் உள்ளிட்ட வீரர்களுக்கு அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், க்ளாசீன், ஜூனியர் டாலா, ஜோன்கர் ஆகியோர் முதன் முதலாக தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெறுகின்றனர்.

×Close
×Close