தமிழ்நாடு பிரீமியர் லீக்: திண்டுக்கல் அணிக்கு புதிய கேப்டன்!

அஷ்வின், தமிழக அண்டர் 15, 17, 22 மற்றும் 25 பிரிவுகளில் விளையாடி உள்ளார். குறிப்பாக, அண்டர் 17 மற்றும் 25 அணிக்கு கேப்டனாகவும் அவர்...

இந்தாண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜுலை 22-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. அணிகளின் விவரம்:- தூத்துக்குடி பாட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ்.

இதில், திண்டுக்கல் அணி சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ரவிச்சந்திரன் அஷ்வின் தேசிய அணிக்கு விளையாட செல்வதால், தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் இரண்டாவது சீசனில், ரசிகர்களின் பிடித்தமான அணியான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக அஷ்வின் வெங்கடராமன் செயல்படுவார்.

கடந்த 2016 சீசனில் இருந்தே அஷ்வின் வெங்கடராமன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அவர் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ளார். அஷ்வின், தமிழக அண்டர் 15, 17, 22 மற்றும் 25 பிரிவுகளில் விளையாடி உள்ளார். குறிப்பாக, அண்டர் 17 மற்றும் 25 அணிக்கு கேப்டனாகவும் அவர் செயல்பட்டிருக்கிறார்.

மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க சிட்டி XI அணிக்கும், 2010 புச்சி பாபு தொடரிலும், 2013 பிசிசிஐ கார்ப்பரேட் டிராஃபி தொடரிலும் அவர் விளையாடியிருக்கிறார்.

பயிற்சியாளர் வெங்கட்ரமணா மற்றும் துணை பயிற்சியாளர் குரு கேதர்நாத் ஆகியோருடன் இணைந்து, இந்த இரண்டாவது சீசனில், ராகன்ஸ் அணியை அஷ்வின் வெற்றிக்கு இட்டுச் செல்வார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close