சாதித்து காட்டிய தமிழக மாணவி ஷாலினி.. இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக தேர்வு!

ஜூன் மாதமே ஹாலினி இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக கோபிசெட்டி பாளையம் மாணவி ஹாலினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்த ஹாலினிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

19 வயதுக்குள்பட்ட இந்திய மகளிர் கைப்பந்து (வாலிபால்) அணியில் விளையாடுவதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி எஸ்.ஷாலினி தேர்வாகி அனைவருக்கும் பெருமை சேர்த்தார்.

அதன் பின்பு, மகாராஷ்ட்ரா மாநிலம் புணேவில் ஆசிய அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கூடைப்பந்து போட்டிகள் பங்கேற்கும் இந்திய அணிகளுக்கான தேர்வு முகாம்கள் 1 மாதம் நடைப்பெற்றன. இதில் இந்திய அணிக்கான 12 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன்.அதில் சென்னை மாணவி ஜோதி உட்பட ஷாலினியும் ஒருவர்.அப்போதே அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் தான் ஷாலினி.

ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஹாலினி சிறு வயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வமுடையவர். குறிப்பாக கூடைப்பந்தாட்டம் ஹாலினிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கல்லூரியில் வகுப்பறையில் இருந்ததை விட மைதானத்தில் ஹாலினி இருந்த நேரம் தான் அதிகம் என்கிறார்கள் அவருடைய வகுப்பு ஆசிரியர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்ட ஹாலினி இப்போது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 10 தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை வியட்நாமில் நடைப்பெற்ற 19 ஆவது ஆசிய அளவிலான 19 வயதுக்குள்பட்ட மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி கடுமையாக விளையாடி 11 ஆவது இடத்தை பிடித்திருந்தார். அந்த போட்டியில் ஹாலினியின் பங்களிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்திய அணியில் இடம்பிடித்து, அணியின் கேப்டனாகவும் உயர்ந்து, ஆசிய அளவிலான போட்டியிலும் அட்டகாசமாக விளையாடி நாடு திரும்பி ஹாலினிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேப்டன் ஹாலினி (left)

கேப்டன் ஹாலினி (left)

கடந்த மார்ச் மாதம் வெளியான பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஷாலினி குறித்த வெளியான சிறப்பு கட்டுரை ஒன்றில், இந்தியாவில் மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டியில் அடுத்தும் மின்னும் நட்சத்திரமாக ஹாலினி கண்டிப்பாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களின் கணிப்பின் படி ஜூன் மாதமே ஹாலினி இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தேர்வாகியுல்லா கோபிசெட்டி பாளையம் மாணவி ஹாலினிக்கு தமிழக காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளுக்கு பள்ளி அளவிலும், கல்லூரி அளவிலும் முக்கியத்துவம் தரபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த போதிலும், ஹாலினி போன்று கிராமத்தில் இருந்து வரும் பெண்கள் கூடைப்பந்து மட்டுமில்லை, குண்டு எரிதலில் தொடங்கி பளு தூக்கும் போட்டி வரை அனைத்து பிரிவுகளிலும் சத்தமே இல்லாமல சாதனை படைத்து கொண்டிருக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close