Advertisment

முதல் இந்திய ஸ்கோரர்… நியூஸி, கிரிக்கெட்டில் தடம் பதித்த சென்னை இளைஞர்…!

Chennai-born Arun Kumar Manickavasagam, first official scorer from India for New Zealand cricket Tamil News: நியூசிலாந்து கிரிக்கெட்டில் ஸ்கோராக இணைந்துள்ள சென்னையைச் சேர்ந்த அருண்குமார், இந்த சாதனையை எட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
New Zealand Cricket's first official scorer from India; who is Arun Manickavasagam

Arun Manickavasagam Tamil News: இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. கிரிக்கெட் குறித்து இங்குள்ள சிறுவர்களிடம் கூட நாம் விவாதிக்க முடியாது. அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது பற்று கொண்டவர்களாவும், ஆழ்ந்த அறிவை உடையவர்களாகவும் உள்ளனர். இப்படி கிரிக்கெட் சிந்தனையில் ஊறியுள்ள அவர்களின் கனவு, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பதாகத் தான் இருக்கிறது.

Advertisment

ஆனால், கால சூழ்நிலைகளால் அந்த கனவு நனவாகுவதில்லை. என்றாலும், கிரிக்கெட்டை மூச்சுக் காற்றாய் சுவாசித்த இளைஞர்கள் சிலர் அயல்நாட்டு அணிகளில் களமிறங்கி விளையாடுகிறார்கள் என்கிற செய்தியை நாம் தெரிந்து கொள்கிறோம்.

இதேபோல், கிரிக்கெட்டை நேசித்த சென்னையை சேர்ந்த அருன்குமார் மாணிக்கவாசகம் என்ற இளைஞர், அந்த வீரர்களை விட ஒருபடி மேல் சென்று, நியூசிலாந்து கிரிக்கெட்டில் முதல் இந்திய ஸ்கோரராக தடம் பதித்துள்ளார்.

யார் இந்த அருன்குமார் மாணிக்கவாசகம்?

30 வயதான அருண் குமார் மாணிக்கவாசகம் சென்னையை சேர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை இங்கு முடித்த அவர், கர்நாடகாவின் மணிபால் பல்கலைகழக்கத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு மும்பையில் உள்ள ஐஐடியில் இண்டர்ன்ஷிப் செய்தார். பின்னர், மெக்கானிக்கல் இண்ஜீனியரிங் பிரிவில் பிஎச்.டி பட்டம் பெற 2014ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

கிரிக்கெட்டில் "பால் பாயாக" தொடங்கிய பயணம்…

பிஎச்.டி பட்டம் பெற நியூசிலாந்து சென்ற அருண் குமார், படிப்புடன் தான் நேசித்த கிரிக்கெட்டிலும் தனது பயணத்தை தொடங்கினர். சிறுவயது முதலே தோனியின் ரசிகனாக இருந்த அவருக்கு நியூசிலாந்தின் கிளப் அணிகளில் கிரிக்கெட் ஆட வாய்ப்பு கிடைத்தது. பிறகு, 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நியூசிலாந்து மண்ணில் நடந்த போட்டிகளில் அருண் குமார் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் ஒரு "பால் பாயாக" சேவை செய்தார்.

ஸ்கோரராக வாய்ப்பு

இதன் மூலம் அவருக்கு நியூசிலாந்து கிரிக்கெட்டில் நட்பு வட்டாரம் விரிவடையவே, ஒரு கிரிக்கெட் கிளப்பில் பால் ஸ்கோரராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் உள்ள டிஜிட்டல் பலகையில் ஸ்கோரை மாற்ற வேண்டும். இந்த பணி அவருக்கு பிடித்துப்போக, ஒவ்வொரு பந்திற்கும் ஸ்கோரை மாற்றி வந்தார். ஆனால், இந்த பணியை அவர் வாரத்தின் சனிக்கிழமையில் மட்டும் பகுதி நேர பணியாக செய்து வந்தார்.

முழு நேர ஸ்காரராக…

தொடர்ந்து தனது பணியில் அருண்குமார் நல்ல வளர்ச்சியும் கண்டார். இந்த நேரத்தில் தான், 2018ல் நடந்த 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான (U19) உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கோரர் வரவில்லை. இதனால் அவசர அவசரமாக அழைக்கப்பட்ட அருண் குமார் அந்த தொடரில் ஸ்கோரராக பணி அமர்த்தப்பட்டார். அது முதல் அவரின் ஸ்கோர் பணி முழு நேரமாக மாறிப்போனது. போட்டி நடைபெறும் போதெல்லாம் அணிகளுடன் பயணம் செய்து தனது பணியைத் தொடர்வார்.

நியூசிலாந்து கிரிக்கெட்டில் முதல் இந்திய ஸ்கோரர்…

நியூசிலாந்து கிரிக்கெட்டில் ஸ்கோரிங் மேலாளர்கள் பணி என்பது அங்கீகரிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அந்த பணிக்கு நியூசிலாந்து கிரிக்கெட் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு நாட்டிலும் நடுவர்களுக்கென எப்படி சங்கம் உள்ளதோ, அதே போன்று ஸ்கோரர்களுக்கும் தனி சங்கம் அமைக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த குழுவில் இணைத்துள்ள அருண்குமார், இந்த சாதனையை எட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்து-வங்காளதேச டெஸ்ட் தொடரின் போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஸ்கோராக செயல்படும் பொன்னான வாய்ப்பையும் அவர் பெற்றார்.

முன்னுதாரணமாக திகழ நம்பிக்கை

அருண்குமார் தற்போது, பிஎச்.டி பட்டம் பெற்ற அதே பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்து வருகிறார். அவரது இந்தப் பயணம் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்றும் நம்புகிறார்.

"பெரும்பாலானோர் ஒரு வீரராகவோ அல்லது நடுவராகவோ தங்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப விரும்புவார்கள். ஆனால், தான் ஒரு ஸ்கோரராக வர வேண்டும் என விரும்புவர்களை பார்ப்பது மிகவும் அரிது. எனது இந்த அனுபவம் அதிகமானோர் இந்த பணிக்கு வர விரும்ப வழிவகுத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் இந்த பணியில் மிகுந்த மகிழ்ச்சியும், அனுபவமும் உள்ளது." என்று அருண்குமார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Sports Cricket New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment