Advertisment

இலங்கைக்கு எதிராக மிட்சல் சதம்: திடீரென நியூஸி.-க்கு ஆதரவாக குதித்த இந்திய ரசிகர்கள்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்திய நிலையில், அவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Nz vs SL: Daryl Mitchell hits ton; indian Fans celebrate Tamil News

New Zealand vs Sri Lanka, 1st Test, Day 3; Daryl Mitchell hits ton, Team India Fans celebrate Tamil News

News about Daryl Mitchell, Sri Lanka and New Zealand in Tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (9ம் தேதி) முதல் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 87 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் கேப்டன் டிம் சவுதி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisment

தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்ட நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியில் அரைசதம் அடித்த தொடக்க வீரர் டாம் லதாம் 64 ரன்களும், அதிரடியாக ரன்களை சேர்த்து சதம் விளாசிய டேரில் மிட்செல் 102 ரன்களும் எடுத்தனர்.

publive-image

இறுதியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 373 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்கள் 83 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூரிய 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி நியூசிலாந்தை விட 65 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

மிட்சல் சதம்

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை அணியின் பந்துவீச்சை அசத்தலாக சமாளித்தார். அவ்வப்போது பவுண்டரி சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சதம் விளாசி மிரட்டினார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவர் பதிவு செய்யும் 5வது சதம் இதுவாகும். தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த மிட்சல் 193 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அடித்து 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கொண்டாடும் இந்திய ரசிகர்கள் - காரணம் என்ன?

இந்நிலையில், மிட்சல் சதம் விளாசியதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் தோல்வி பெற்றால் கூட இந்தியாவுக்கான வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

publive-image

நியூசிலாந்துக்கு எதிரான இந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்சில் மட்டும் 355 ரன்கள் வரை எடுத்தது. இதனால், இந்தியாவுக்கு இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பில்லை என பலரும் கூறி வந்தனர். மேலும், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் ரன்கள் சேர்க்க திணறியது. ஆனால் இன்று 3ம் நாள் ஆட்ட நேரத்தில், அந்த அணிக்கு நங்கூரம் போட்டது போல் மிட்சல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்தின் ரன்ரேட் எகிறியது.

இந்த நிலையில், அவரது ஆட்டத்தை பாராட்டும் விதமாகவும், இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்புக்கான கதைவை ஓரளவுக்கு திறந்தற்காகவும் அவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும், அவர் குறித்த சுவையான கமெண்ட்டுகளையும், மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket Indian Cricket Team World Test Championship Indian Cricket Srilanka New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment