Advertisment

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்... மீண்டும் வந்தது 5 வளையங்கள்!

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்... மீண்டும் வந்தது 5 வளையங்கள்!

Olympic rings back in Tokyo Bay; a sign of hope in pandemic :  டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள். கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் கப்பலில் மீண்டும் அந்த வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

Advertisment

15 மீட்டர் உயரம் மற்றும் 33 மீட்டர் அகலத்தில் நீலம், கறுப்பு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் அந்த வளையங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரவும் இந்த வளையங்கள் மின் விளக்குகளால் ஒளிரவைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த வளையங்கள் வைக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக மார்ச் மாதம் ஒலிம்பிக் தள்ளி வைக்கப்பட்டது. இந்த வளையங்கள், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 15,400 வீரர்கள் பாதுகாப்பாக ஜப்பானுக்குள் வரலாம் என்ற நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment