Advertisment

Pakistan vs Afghanistan Live Score: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, Pakistan vs Afghanistan Match Live Score Updates: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PAK vs AFG Live Score, Pakistan vs Afghanistan World Cup Live Score

PAK vs AFG Live Score, Pakistan vs Afghanistan World Cup Live Score

Afghanistan vs Pakistan World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், லீட்ஸ் நகரின் ஹெட்டிங்லே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில், சர்ஃப்ரஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

Advertisment

அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில், பாகிஸ்தான் இன்றைய போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான், மூன்று வெற்றியும், மூன்று தோல்வியும் பெற்றுள்ளது. மழையால் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால், 7 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் அந்த அணி 6வது இடத்தில் உள்ளது. அதேசமயம், இதுவரை 7 போட்டிகளில் ஆடி, அனைத்திலும் தோல்வியைத் தழுவியுள்ள ஆப்கன் அணி, ஏற்கனவே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டு மூலம் ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

மழைக்கான வாய்ப்பு – 0%

ஈரப்பதம் – 80%

காற்று – 6 km/h

அதிகபட்ச வெப்பநிலை – 30 டிகிரி செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை – 14 டிகிரி செல்சியஸ்

இன்றைய ஆட்டத்தில், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment