Advertisment

நிறவெறி புகார் : மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் கேப்டன்

இவரது வருத்தத்தை ஐசிசி ஏற்றுக்கொள்ளுமா அல்லது இவருக்கு தடை விதிக்கப்படுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிறவெறி புகார் : மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் கேப்டன்

Sarfraz Ahmed apologizes after racist remark - தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்டத்தின் 37வது ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் பெலக்வாயோ பேட்டிங் செய்து கொண்டு இருக்கும்போது விக்கெட்-கீப்பராக செயல்பட்டு கொண்டு இருந்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இனவெறியை தூண்டும் வகையில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அவர் பெலக்வாயோவை நோக்கி  "ஏய் கருப்பு வீரனே, இன்று உன் தாய் எங்கே இருக்கிறார், உனக்காக அவர் இப்போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்." என்று கூறினார்.

Advertisment

,

இந்த கருத்துக்கள் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு அணியின் கேப்டன் இது போல் செயல்பட்டது வருத்தம் அளிப்பதாக பெரும்பாலானவர்கள் கூறினர். முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சோயிப் அக்தர், கூறுகையில் "சர்ப்ராஸ்சின் செயல் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக என்னால் ஏற்று கொள்ளா முடியாது. அவர் கண்டிப்பாக அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று கூறினார்.

கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

,

இந்நிலையில் சர்ப்ராஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

,

,

விரக்தியில் நான் வெளிப்படுத்திய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால்

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும்  புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது.

எனது வார்த்தைகள் எதிரணி வீரர்களுக்கோ அல்லது கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்  நான் அவ்வாறு செயல்படவில்லை. கடந்த காலங்களிலும் சரி வரும் காலத்திலும் சரி எனது சக வீரர்களுடன் தோழமை உணர்வுடனும், மரியாதையுடனும் களத்திலும் களத்திற்கு வெளியேவும் இருப்பேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவரது வருத்தத்தை ஐசிசி ஏற்றுக்கொள்ளுமா அல்லது இவருக்கு தடை விதிக்கப்படுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்
Pakistan Vs South Africa Sarfraz Ahmed
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment