Advertisment

சென்னையில் நடக்கும் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தான், சீனா அணிகள் பங்கேற்பது உறுதி

சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான், சீனா பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Pakistan, China to participate in Asian Champions Trophy hockey tournament in Chennai Tamil News

Asian Champions Trophy hockey tournamen tournament will be held from August 3 to August 12 in Chennai Tamil News

Asian Champions Trophy hockey 2023 Tamil News: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்டு 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி அரங்கேறும் நிலையில், இப்போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவுடனான உறவு சீராக இல்லாததால் பாகிஸ்தான், சீனா அணிகள் இந்த போட்டியில் பங்கேற்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில், பாகிஸ்தான், சீனா அணிகள் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்து இருப்பதாக ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஹாக்கிப் பிரிவின் தலைவர் ஜே.சேகர் மனோகரன் தி இந்து இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “இரு அணிகள் (சீனா மற்றும் பாகிஸ்தான்) பங்கேற்பதில் ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்ததால், நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். அவர்கள் தங்கள் உறுதிப்படுத்தலை அனுப்பியுள்ளனர்." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai China Sports Pakistan Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment