Advertisment

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹாசன் அலி...

இரு வீட்டாரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி துபாய் செல்ல உள்ளனர். அதே வாரத்தில் ஷமியாவிற்கும் ஹாசன் அலிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pakistan Cricketer Hasan Ali marries Indian girl Shamia Arzoo

Pakistan Cricketer Hasan Ali marries Indian girl Shamia Arzoo

Pakistan Cricketer Hasan Ali marries Indian girl Shamia Arzoo :  பாகிஸ்தான் - இந்தியா, எல்லைப் பிரச்சனை, கிரிக்கெட் பிரச்சனை என ஆயிரத்தெட்டு பிரச்சனை இருந்தாலும், திருமணம் பந்தங்கள் என்று வரும் போது ஆச்சரியத்தில் சுற்றி இருப்போரை ஆழ்த்திவிடுகின்றனர். ஏற்கனவே இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், பாகிஸ்தான் வீரர்கள் ஜாஹீர் அப்பாஸ், மோசின் கான், மற்றும் சோயாப் மாலிக் வரிசையில், இந்தியாவிற்கு மாப்பிள்ளையாக வர இருக்கிறார் மற்றும் ஒரு கிரிக்கெட் வீரரான பாகிஸ்தானை சேர்ந்த ஹாசன் அலி.

Advertisment

ஹரியானாவை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரான ஷமியா அர்ஜூவினை அடுத்த மாதம் கரம் பிடிக்க உள்ளார் ஹாசன் அலி.  ஹரியானா மாநிலத்தில் உள்ள நுஹ் மாவட்டத்தின் மேவத் என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர் ஷமியா. ஃபரிதாபாத்தில் உள்ள மானவ் ரச்சனா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த இவர் ஜெட் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைனில் வேலை பார்த்தவர். தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார் ஷமியாவின் சகோதரர் அக்பர் அலி.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இரு வீட்டாரும் துபாயில் சந்தித்து இந்த திருமணத்தை முடிவு செய்தனர். இரு வீட்டாரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி துபாய் செல்ல உள்ளனர். அதே வாரத்தில் ஷமியாவிற்கும் ஹாசன் அலிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஷமியாவுடன் பழகி வருவதாகவும், இரு வீட்டாரும் விரைவில் தேதிகளை முடிவு செய்ய உள்ளனர் என்றும் ஹாசன் அலி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஷமியா அர்ஜூ எப்படி இருப்பார் என்று இதுவரை யாருக்கும் தெரியாத நிலையில், யூடியூபர் ஒருவரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவரைத்தான் ஷமியா என்று கூறி கொண்டாடியும் வருகின்றனர் சிலர்.

இது தொடர்பான செய்தியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்க

ஹரியானாவைச் சேர்ந்த ஷமியா

ஷமியாவின் பெற்றோர்களுக்கு மொத்தம் 7 குழந்தைகள். இரண்டாவதாக பிறந்தவர் தான் ஷமியா. ஃப்ரிதாபாத்தில் உள்ள செயிண்ட் பீட்டர் பள்ளியில் ஆரம்ப கல்வியைக் கற்றார். செக்டார் 14ல் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் மேல்நிலை வகுப்பினை முடித்த அவர், ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங்கை மானவ் ரச்சனாவில் பயின்றார் பின்பு ஜெட் ஏர்வேஸில் வேலை புரியத் துவங்கினார். சிறு வயது முதல் பைலட் ஆக வேண்டும் என்பது தான் ஷமியாவின் கனவு. கடந்த மூன்று ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார் ஷமியா.

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment