Advertisment

'டேனிஷ் கனேரியா ஹிந்து என்பதால் வீரர்களால் அவமதிக்கப்பட்டார்' - உண்மை உடைத்த சோயப் அக்தர் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'டேனிஷ் கனேரியா ஹிந்து என்பதால் வீரர்களால் அவமதிக்கப்பட்டார்' - உண்மை உடைத்த சோயப் அக்தர் (வீடியோ)

பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா ஒரு ஹிந்து என்பதால், அவரிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாகரீகமற்று நடந்து கொண்டது என சோயப் அக்தர் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து 'Game on Hai' எனும் கிரிக்கெட் ஷோவில் பேசிய அக்தர், "என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், கராச்சி, பஞ்சாப், பெஷாவர் பிரச்சனை குறித்து நாம் எண்ணற்ற தடவை வாதிட வேண்டியிருந்தது என்பது மூர்கத்தனமானது. 'எங்களுடன் இங்கே ஏன் சாப்பிடுகிறாய்?' என்று டேனிஷ் கனேரியா போன்ற ஹிந்து பிளேயர்களிடம் இதர வீரர்கள் கேட்டுள்ளனர்.

#AUSvNZ 2nd Test ஆஸி., பேட்ஸ்மேன்கள் - "அடுத்த அட்டாக்குகுள்ள அட்ரஸ மாத்துடா கைப்புள்ள"

அவர்களுக்கு எப்போதும் நான் பதிலளிப்பது, "உங்கள் வீட்டுக்குள் நுழைந்து உணவுகளை நான் எடுத்துக் கொண்டு, வெளியே போய் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் உங்களை வெளியே தள்ளினால் நீங்கள் எப்படி உணருவீர்கள்?" என்பது தான்.

26, 2019

அவரது நம்பிக்கை (மதம்) காரணமாக , பலரும் அவர் அணியில் இருப்பதை விரும்பவில்லை. அவரது திறமையான பணிக்கு எப்போதும் அவர் பாராட்டப்பட்டதில்லை. அதுமட்டுமின்றி, மற்ற வீரர்களால் தொடர்ந்து அவர் அவமானப்படுத்தப்பட்டார்" என்றார்.

https://tamil.indianexpress.com/sports/pat-cummins-girlfriend-idea-to-spend-ipl-money-15-5-crore/

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணி வீரராக திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாடியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் சுமத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Shoaib Akhtar Danish Kaneria
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment