Advertisment

புதிய பயணத்துக்கு தயாராகும் பாகிஸ்தான் - சறுக்குமா? சாதிக்குமா?

நாங்கள் ஒவ்வொரு வீரரிடமும் தனித்தனியே பேசி, நிலைமையை எடுத்துச் சொல்லி, அவர்களை அனைத்துக்கும் தயார் செய்துள்ளோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pakistan vs england, cricket news, sports news, latest cricket news, sports updates

Pakistan vs england, cricket news, sports news, latest cricket news, sports updates

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நிலவும் லாக்டவுன் காரணமாக, உலகின் பெரும்பாலான தொழில்துறைகள் முடங்கிக் கிடக்க, பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது.

Advertisment

வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமே இல்லாத சூழலில், பொழுதுபோக்கில் கவனம் செலுத்த மக்களுக்கு எப்படி நாட்டம் இருக்கும்? பொழுது போகாமல் இருப்பது தான் இங்கு பிரச்சனையே!

எனினும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, 'கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்' என்ற ஃபார்முலாவை உலக நாடுகள் கையில் எடுத்துவிட்டன. 'இனியும் பாடி தாங்காது' என்று விளையாட்டு உலகமும், ஆயுதங்களை கையில் ஏந்தத் தொடங்கிவிட்டன.

கங்குலியின் பாஸிட்டிவ் பதில்; களத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் 'ரிலாக்ஸ்' கிடைக்குமா?

அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் துணிந்து ஒரு முடிவை எடுத்துள்ளது. இங்கிலாந்து சென்று அங்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான அணியை அறிவித்துள்ளது.

அணி என்றால் 14 பேர் கொண்ட, 15 பேர் கொண்ட அணி அல்ல... 29 வீரர்கள் கொண்ட மெகா அணியை அறிவித்துள்ளது. காரணம், வைரஸ் அச்சுறுத்தல். தொடரின் போது, வீரர்கள் யாருக்காவது தொற்று ஏற்பட்டால், அந்த நெருக்கடியை சமாளிக்க அதிக மாற்று வீரர்களை இங்கிலாந்து அனுப்புகிறது பாகிஸ்தான்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான தனது அடுத்தடுத்த தொடர்களை ரத்து செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் துணிந்து ஒரு சர்வதேச தொடரை கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல் ஹக் கூறுகையில், "இது வழக்கத்திற்கு மாறான சூழல். இது வீரர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாம் தான் சூழலுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வீரரிடமும் தனித்தனியே பேசி, நிலைமையை எடுத்துச் சொல்லி, அவர்களை அனைத்துக்கும் தயார் செய்துள்ளோம். 4 வாரத்துக்கு தனிமையில் பயிற்சி, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், ரசிகர்கள் இல்லாத ஸ்டேடியத்தில் விளையாடுதல் என மனரீதியாக வீரர்கள் தயார் செய்துள்ளோம்.

நாங்கள் மூன்று மாதங்களாக கிரிக்கெட் விளையாடாததால் இது எங்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை அல்ல. ஆனால் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதை இவ்வளவு நாட்களாக தவறவிட்டிருந்த சூழலில், மீண்டும் களத்தில் களமிறங்க பசியுடன் காத்திருக்கின்றனர்" என்றார்.

இந்தியா 'மிக்ஸிங் வித்' பாகிஸ்தான் - பெஸ்ட் டி20 அணி அறிவித்த பாபர் ஆஸம்

உலகமே, கொரோனாவுக்கு அஞ்சி முடங்கியிருக்கும் சூழலில், இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் மீண்டும் விளையாட்டு உலகத்துக்கு ரீஸ்டார்ட் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக, சமீப காலங்களில் கிரிக்கெட்டில் சொதப்பி வந்த பாகிஸ்தான், ஒரு அணியாக எழுச்சி பெற்று, கொரோனாவுடன் மோத தயாராகிவிட்டது. கொரோனாவுக்கு முந்தைய அணியின் மோசமான டிராக் ரெக்கார்டுகளை ஓவர்கம் செய்யுமா என்பதே அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதே போன்று மற்ற அணிகளும் தகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் கோதாவில் குதித்து, கொரோனாவை புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment