Advertisment

வீடியோ: ஒரே ஓவரில் 6,6,6,6,6,4 ரன்கள்… சாதனை படைத்த அயர்லாந்து வீரர்!

Ireland batter Paul Stirling smashed pacer James Sales for 34 runs in the ongoing T20 Blast tournament in England Tamil News: ஜேம்ஸ் சேல்ஸின் ஓவரில் மிரட்டில் அடி அடித்த ஸ்டிர்லிங் அந்த ஓவரில் மட்டும் 6,6,6,6,6,4 என 34 ரன்கள் குவித்து அசத்தினார்.

author-image
WebDesk
New Update
Paul Stirling smashes 6,6,6,6,6,4 in an over for Birmingham Bears in T20 Blast 

Vitality Blast; Birmingham Bears vs Northants Steelbacks - Ireland batter Paul Stirling

Paul Stirling Tamil News: இங்கிலாந்து மண்ணில் 'ப்ளாஸ்ட் டி20' தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றை ஆட்டத்தில் பர்மிங்காம் பியர்ஸ் - நார்தண்ட்ஸ் ஸ்டீல்பேக்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் 16 ஓவர்களாகக் குறைப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் பியர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதமடித்த பால் ஸ்டிர்லிங் 119 ரன்களும், அரைசதம் விளாசிய சாம் ஹெய்ன் 66 ரன்களும் எடுத்தனர்.

Advertisment

தொடர்ந்து 208 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நார்தண்ட்ஸ் ஸ்டீல்பேக்ஸ் அணி 14.2 வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 81 ரன்னில் சுருண்டது. இதனால் பர்மிங்காம் பியர்ஸ் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அந்த அணி சார்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக் லிண்டோட், டேனி பிரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும்,ஹென்றி ப்ரூக்ஸ் 2 விக்கெட்டுகளையும், கார்லோஸ் பிராத்வைட் மற்றும் கிரேக் மைல்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஒரே ஓவரில் 6,6,6,6,6,4 ரன்கள் குவித்த பால் ஸ்டிர்லிங்…

publive-image

இந்த ஆட்டத்தில் பர்மிங்காம் பியர்ஸ் அணி சார்பில் களமாடிய தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அதிரடியான ஆட்டம் அணியின் ஸ்கோர் மளமளவென உயர உதவியது. மேலும், 51 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 10 சிக்ஸர்களை பறக்கவிட்டு 119 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக, ஜேம்ஸ் சேல்ஸ் வீசிய 13வது ஓவரை எதிர்கொண்ட பால் ஸ்டிர்லிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

publive-image

அவர் கடைசி பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவுண்டரி விளாசினார். ஜேம்ஸ் சேல்ஸின் ஓவரில் மிரட்டில் அடி அடித்த ஸ்டிர்லிங் அந்த ஓவரில் மட்டும் 34 ரன்கள் குவித்து அசத்தினார். இப்படி அதிரடி காட்டிய அயர்லாந்து வீரரின் முகத்தில் புன்னகை தவழவில்லை. கடைசி பந்தில் அவர் பவுண்டரி அடித்தது ஏமாற்றம் கண்டது போல் உணர்ந்திருந்தார். எனினும், இந்த ஆட்டத்தில் தனது டி20 சதத்தை பதிவு செய்தார். மேலும், 7000 டி20 போட்டி ரன்கள் என்கிற புதிய மைல்கலையும் எட்டிப்பிடித்தார். இந்த சாதனையை எட்டிப்பிடித்த முதல் அயர்லாந்து வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

England Sports Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment