Advertisment

ஷெராவத் இருந்தால் எந்த மார்ஷலுக்கும் வேலை இல்லை: கலக்கும் கபடி புயல்

பவனை பெங்களூர் அரவணைத்துக் கொள்ள, மதகுடைத்த வெள்ளம் போல், ரெய்டு ராகத்தை ரணகள ஸ்ருதியில் பாட, 24 போட்டிகளில் 282 ரெய்டு புள்ளிகளை தனது நெஞ்சில் பொறித்துக் கொண்டார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
pawan kumar sehrawat bengaluru bulls pro kabaddi season 7 - பவன் குமார் ஷெராவத் - புரோ கபடி லீக் தொடரின் 'தரமான செய்கை' ரெய்டர்!

pawan kumar sehrawat bengaluru bulls pro kabaddi season 7 - பவன் குமார் ஷெராவத் - புரோ கபடி லீக் தொடரின் 'தரமான செய்கை' ரெய்டர்!

'Hi-Flyer' என்ற அழைக்கப்படும் ரெய்டு புயல் ஒன்று, புரோ கபடி லீக் 7வது சீசனின் பல 'விக்டிம்'-களின் புலம்பலுக்கு காரணமாக சர சரக்கிறது.

Advertisment

பவன் குமார் ஷெராவத்... எனும் அந்த பெயர் பெங்களூரு புல்ஸ் பென்ச்களிலும், பெங்களூரு கேலரிகளிலும் சப்தமாக உச்சரிக்கப்பட்டு வருவதை, புரோ கபடி லீக் தொடரை தவறாமல் பார்ப்பவர்கள் அறியலாம்.

5 அடி 10 இன்ச் ஷெராவத்தின் Signature Move அவரது 'ரன்னிங் ஹேண்ட் டச்' தான். எதிரணி டிஃபென்டரை கூர்நோக்கும் பவனின் கண்கள், எதிராளி இமைக்கும் நேரத்தில், தனது அசுர வேக ரெய்டில், தனது முதல் கபட்ஸ் ராகத்தின் போதே தொட்டு விட்டு, அடுத்த கபட்ஸ் ராகத்தில் தனது பார்டரில் நிற்கும் வேகத்தை நீங்கள் பார்த்தால் தான் உணர முடியும்.

82 கிலோ கொண்ட இந்த 23 வயது ரெய்டர், புரோ கபடியில், முதன் முதலில் சீசன் மூன்றில் விளையாடியது பெங்களூரு புல்ஸ் அணிக்காக. 45 புள்ளிகளுடன் தனது அணியின் டாப் ரெய்டராக பணியை முடித்தார். ஆனால், சீசன் நான்கில் ஜொலிக்க தவற, ஐந்தாவது சீசனில் குஜராத் அணிக்காக வாங்கப்பட்டு, பெரும்பாலான போட்டிகளில் பென்ச்சிலேயே தனது ஏக்கத்தை விதைத்தார்.

மீண்டும் ஆறாவது சீசனில், பவனை பெங்களூர் அரவணைத்துக் கொள்ள, மதகுடைத்த வெள்ளம் போல், ரெய்டு ராகத்தை ரணகள ஸ்ருதியில் பாட, 24 போட்டிகளில் 282 ரெய்டு புள்ளிகளை தனது நெஞ்சில் பொறித்துக் கொண்டார். அந்த சீசனில் ஒரு ரெய்டரின் அதிகபட்ச புள்ளிகள் இதுதான். அதுமட்டுமா... ஆறாவது சீசனின் மதிப்புமிக்க வீரர் எனும் கிரீடத்தை தலையில் சுமந்து கொண்டார். இறுதிப் போட்டியில் மட்டும் 22 புள்ளிகளை குவித்த ஒரே தனி ரெய்டர் பவன் ஷெராவத் மட்டுமே.

publive-image

இப்போது சீசன் 7....

அதே பெங்களூர் அணி. களமாடி இருக்கும் ஆட்டம் 14. அதில், கோட்டைத் தொட்டு உள்ளே சென்று தனது கைகளால் செய்த செய்கையின் மொத்த புள்ளிகள் 174.

ரெய்டு ஸ்டிரைக் ரேட் - 66%

டேக்கில் ஸ்டிரைக் ரேட் - 45%

ஒரே போட்டியில் எடுத்த அதிகபட்ச புள்ளிகள் - 29

இந்த சீசனில் அவர் மொத்தம் சென்ற ரெய்டுகள் - 250

அதில் அவருடைய வெற்றி சதவிகிதம் - 66

சூப்பர் ரெய்டுகள் - 3

சூப்பர் 10S - 8

மொத்த ரெய்டு புள்ளிகள் 165

ஒவ்வொரு ஆட்டத்திலும், அவர் பார்டர் தாண்டும் போதும், எதிரணி தலைகளை தட்டி வெளியே அனுப்பும் அவரது ஆவரேஜ் ரெய்டு புள்ளிகள் 11.78

பிறப்பிடம் இந்திய தலைநகராக இருந்தாலும், பெங்களூரு புல்ஸ் அணியின் தல என்னவோ ஷெராவத் தான். ரெய்டின் போது, இவரது Lion Jump-களுக்கு விசிலடிக்கவே, பெங்களூரு கண்டீவரா ஸ்டேடியத்தில் கேலரிகள் நிறைந்திருக்கும்.

publive-image

சமீபத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 43-42 என்ற நைல் பைட் வெற்றிக்குப் பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில், பெங்களூரு புல்ஸ் அணியின் கோச் ரந்திர் சிங் ஷெராவத் சொன்ன வார்த்தைகள் இவை,

"ஆட்டத்தில் 20-11 என்று நாங்கள் பின்தங்கியிருந்த இக்கட்டான தருணத்தில் நான் ஷெராவத்திடம், 'விரைவாக ஒரு 15 நொடிகளுக்கு மட்டும் ரெய்டு சென்று, உனது வேகத்தால் அவர்களை அச்சப்படுத்து' என்றேன். ஆனால், அந்த தருணத்தில் ஷெராவத் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து, கேப்டன் ரோஹித்திடம், 'நீ இப்போது பொறுமையாக இரு.. இனி அவன் பார்த்துக் கொள்வான்' என்றேன். கதையை முடித்துவிட்டான்."

அப்போட்டியில் ஷெராவத் தட்டிய தலைகளின் எண்ணிக்கை 29. வெற்றி, பெங்களூரு கைகளில்.

'நான் சாதனைகளுக்கு விளையாடுவதில்லை; அணிக்காவே விளையாடுகிறேன்' என்பதே எப்போதும் இந்த Hi-Flyer வீரரின் வேதவாக்கு.

பெங்களூரு புல்ஸ் அணி மட்டுமல்ல... எந்த அணிக்கும் யார் வேண்டுமானாலும் மார்ஷலாக இருக்கலாம். அணியை வெற்றிப் பெற வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கலாம். ஆனால், ஷெராவத் அணியில் இருந்தால் எந்த மார்ஷலுக்கும் அங்கு வேலையில்லை!.

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment