சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மோடிக்கு கூறிய சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துகள்

தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்திய பிரதமர் மோடிக்கு, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்தினர்.

தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்திய பிரதமர் மோடிக்கு, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய பிரதமர் மோடி தன் 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். காலையில் தன் அம்மாவிடம் மோடி ஆசீர்வாதம் பெற்றார். பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். அதில், “நீங்கள் மக்களை சிறந்த முறையில் ஊக்கப்படுத்தி வழிநடத்தி வருகிறீர்கள். தினந்தோறும் பலரது வாழ்க்கையை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள். இந்நாள் அற்புதமான நாளாக இருக்க வாழ்த்துகள்”, என குறிப்பிட்டார்.

இதேபோல், தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ”பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்”, என குறிப்பிட்டிருந்தார்.

இந்திய ஹாக்கி அணியின் ட்விட்டர் பக்கத்திலும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

×Close
×Close