புரோ கபடி 2017: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி!

முதல் பாதியில், தமிழ் தலைவாஸ் அணி 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில், இரு அணிகளும் சவாலுடன் விளையாட்டை...

புரோ கபடி லீக் தொடரில் பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி, தமிழ் தலைவாஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.

புரோ கபடி லீக் தொடரில் 22-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ், தனது முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடியது.

ஆட்டத்தின் முதல் பாதியில், தமிழ் தலைவாஸ் அணி 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில், இரு அணிகளும் சவாலுடன் விளையாட்டை எதிர்கொண்டன. இதனால், கடைசி வரை ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது.

இறுதியில், 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ், தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணியில் கேப்டன் ரோகித் குமார் 12 புள்ளிகள் பெற்றபோதிலும், அந்த அணி தோல்வியை தழுவியது.

முன்னதாக நேற்று நடைபெற்ற 21-வது ஆட்டத்தில், புனேரி பல்தான் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தெர்ஸ் அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில், 28-30 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் அணி வெற்றிபெற்றது.

×Close
×Close