Advertisment

பெங்களூரு புல்ஸ் வெற்றி! மீண்டும் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்!

Pro Kabaddi League 2019, Tamil Thalaivas vs Bengaluru Bulls: தமிழ் தலைவாஸ் அணி 12 ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஏழு தோல்வி, 2 டிரா என 25 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pro kabaddi league 2019 tamil thalaivas vs bengaluru bulls - இக்கட்டான சூழலில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்! ஆக்ரோஷ வெற்றியைப் பெறுமா?

pro kabaddi league 2019 tamil thalaivas vs bengaluru bulls - இக்கட்டான சூழலில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்! ஆக்ரோஷ வெற்றியைப் பெறுமா?

Tamil Thalaivas vs Bengaluru Bulls: புரோ கபடி 7வது சீசனில் இன்று பெங்களூருவில் உள்ள ஶ்ரீ கந்தீரீவா ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.‌

Advertisment

பெங்களூரு புல்ஸ் தனது சொந்த களத்தில் குஜராத் ஃபார்ச்யுன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23-32 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதால் இப்போட்டியில் வென்று மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பும் முயற்சியில் இறங்கும். தமிழ் தலைவாஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 32-21 என தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழ் தலைவாஸின் நட்சத்திர டிபென்டர் மன்ஜீத் சில்லர் காயத்திலிருந்து மீண்டு களத்திற்கு திரும்பினாலும் மற்ற டிபென்டர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மோஹித் சில்லரின் ஆட்டம் படு சொதப்பல். ரெய்டர்களில் ராகுல் சௌத்ரி, சபீர் பாபு, கேப்டன் அஜய் தாகூர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

ஆனால், எதிர்பார்த்த அளவு தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் இதுவரை இல்லை என்பதே உண்மை.

தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஆறு தோல்வி, 2 டிரா என 25 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருந்தது.

இந்நிலையில், இன்று பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் 33 - 27 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

தமிழ் தலைவாஸ் அணி 12 ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஏழு தோல்வி, 2 டிரா பெற்றுள்ளது.

Tamil Thalaivas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment