Advertisment

தமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது

புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கத்தில், இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், புனேரி பால்டன் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pro kabaddi league 2019 tamil thalaivas vs puneri paltan - புனேரி பால்டன் அணியுடன் மோதும் தமிழ் தலைவாஸ் - க்ளைமேக்ஸிலாவது ஆறுதல் கிடைக்குமா?

pro kabaddi league 2019 tamil thalaivas vs puneri paltan - புனேரி பால்டன் அணியுடன் மோதும் தமிழ் தலைவாஸ் - க்ளைமேக்ஸிலாவது ஆறுதல் கிடைக்குமா?

Tamil Thalaivas vs Puneri Paltan: புரோ கபடி 2019 தொடரில், கடைசி இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணியும் புனேரி பல்தான் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றதால் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.

Advertisment

7வது புரோ கபடி சீசனில், வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ், அடுத்து 2 தோல்வி, தொடர்ந்து ஒரு வெற்றி, ஒரு சமன், ஒரு வெற்றி என நம்பிக்கை அளிக்கும் விதமாகவே ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து வரிசையாக எட்டு தோல்விகளை சந்தித்திருக்கிறது.

இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 சமன், 11 தோல்விகளுடன் 27 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் vs புனேரி பால்டன்

இந்நிலையில் புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கத்தில், இன்று புனேரி பல்தான் - தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இரு அணிகளும் 36க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் சம அளவில் புள்ளிகளைப் பெற்றதால் போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment