Advertisment

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல்: முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக 'தங்க மங்கை' பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PT Usha becomes first woman IOA president Tamil News

The elections were held under the supervision of Supreme Court-appointed retired SC judge L Nageswara Rao. (PTI)

News about elections, IOA, president and PT Usha in tamil: இந்திய விளையாட்டு சங்கங்களின் உயர்ந்த அமைப்பான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, 'தங்க மங்கை' மற்றும் பயோலி எக்ஸ்பிரஸ் என்று விளையாட்டு உலகமே போற்றி மகிழும் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீராங்கனையான, கேரளாவை சேர்ந்த பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்திய ஒலிம்பிக் சங்க (IOA) நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று (டிசம்பர் 10 ஆம்தேதி) நடைபெற்ற நிலையில், வாக்கெடுப்பில் உயர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல்கள் முதலில் 2021 டிசம்பரில் நடைபெறவிருந்தன. ஆனால், சில நிர்வாகிகளின் தொடர் இழுத்தடிப்பால் தேர்தலை நடத்துவதில் சிரமம் இருந்தது. இதனிடையே, இந்த மாதம் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) மூலம் இடைநீக்கம் செய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன் என இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷா கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி தனது விருப்பத்தினை வெளியிட்டார். மேலும், கடந்த மாத இறுதியில் அவர் உயர் பதவிக்கான தனி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, ஜூலை மாதம் ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட உஷாவுக்கு எதிராக யாரும் போராட தயாராக இல்லை. 'பய்யோலி எக்ஸ்பிரஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் உஷா, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார், அவர் ஜூலை மாதம் அவரை ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் பி.டி.உஷா.

58 வயதான உஷா, ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்களை அவர் வென்றுள்ளார். 1986-ம் ஆண்டு நடந்த சியோல் ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 4 x 400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்களை தட்டி சென்றார். தவிர, 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். 1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடையோட்ட போட்டியில் 4-வது இடம் பெற்றார்.

95 வருட வரலாற்றில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்க்கு தலைமை தாங்கிய முதல் ஒலிம்பியன் மற்றும் முதல் சர்வதேசப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்திய மற்றும் ஆசிய தடகளத்தில் இரண்டு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய பின்னர், 2000 ஆம் ஆண்டில் ஏராளமான சர்வதேசப் பதக்கங்களுடன் ஓய்வு பெறுவதற்கு முன்பு, ஒரு புதிய முத்திரையை பொறித்துள்ளார்.

1934 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய மகாராஜா யாதவிந்திர சிங்கிற்குப் பிறகு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் விளையாட்டு வீராங்கனை உஷா ஆவார். சிங் மூன்றாவது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் ஆவார். அவர் 1938 முதல் 1960 வரை பதவியில் இருந்தார்.

Sports Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment