புஜாராவின் 'மெர்சல்' கேட்ச்: எதிர்பார்க்காத மேத்யூஸ்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, யாரும் எதிர்பார்க்காத கேட்ச்சாக இது அமைந்தது.

கொழும்புவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டிக்வெல்லா மட்டும் 51 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் முதல் இன்னிங்ஸில் அஷ்வின் 16.4 ஓவர்கள் வீசி, 69 ரன்கள் விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில், மேத்யூஸ் விக்கெட்டும் ஒன்று. இலங்கையின் மிக முக்கியமான வீரரான மேத்யூஸ், அஷ்வின் பந்துவீச்சில், ஸ்லிப்பில் நின்றுக் கொண்டிருந்த புஜாராவிடம் 26 ரன்னில் கேட்ச் ஆனார்.

யாரும் எதிர்பார்க்காத கேட்ச்சாக இது அமைந்தது. மிகவும் வேகமாக வந்த பந்தை, ஒற்றைக் கையில் டைவ் அடித்து பிடித்தார் புஜாரா. இந்த ‘வாவ்’ கேட்ச்சை பந்துவீசிய அஷ்வினும் எதிர்பார்க்கவில்லை, பேட் செய்த மேத்யூசும் எதிர்பார்க்கவில்லை. ஏன்… கேட்ச் பிடித்த புஜாராவே இதை எதிர்பார்க்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வீடியோ இதோ…

×Close
×Close