‘அஷ்வினின் அந்த 2 சிக்ஸ்’! கிங்ஸ் XI பஞ்சாப் வாவ் வெற்றி!

RR vs KXIP 2019 Match: பஞ்சாப் வெற்றி

IPL 2019, KXIP beat RR
IPL 2019, KXIP beat RR

Rajasthan Royals vs Kings XI Punjab: ஐபிஎல் 2019 தொடரில், மொஹாலியில் இன்று(ஏப்.16) இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணி, ராஜஸ்தானை வீழ்த்தியது.

Live Blog

IPL 2019: RR vs KXIP


23:39 (IST)16 Apr 2019

பஞ்சாப் வெற்றி

20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து தோற்றது. இதனால், 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றிப் பெற்றது. 

23:38 (IST)16 Apr 2019

20.0

பின்னி – 4

23:36 (IST)16 Apr 2019

19.5

பின்னி – 2 ரன்கள்

23:35 (IST)16 Apr 2019

19.4

பின்னி – 2 ரன்கள்

23:34 (IST)16 Apr 2019

19.3

பின்னி – 2 ரன்கள்

23:34 (IST)16 Apr 2019

19.2

பின்னி – 0

23:32 (IST)16 Apr 2019

19.1 ஷமி பவுலர்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவை 

கோபால்  – அவுட்

23:03 (IST)16 Apr 2019

117-2

14 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான். பரபரப்பான கிளைமேக்ஸ் நோக்கி மொஹாலி!!

21:45 (IST)16 Apr 2019

183 ரன்கள் இலக்கு

கடைசி ஓவரில் நம்ம ஆர் அஷ்வின் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. 

அஷ்வின் 4 பந்துகளில் 17 ரன்கள்.

21:40 (IST)16 Apr 2019

அடப் போங்கப்பா…

ஆட்டத்துல ஒரு சீரியஸ்னஸ் வேண்டாமா? கடைசிக் கட்டத்தில் பொறுப்புடன் ஆட வேண்டிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழப்பு. கடைசி ஓவரில் ஒரே நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லரும், முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து, 40 ரன்களில் வெளியேறினார். 

21:31 (IST)16 Apr 2019

152-2

17 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 18 பந்துகளில் லோகேஷ் ராகுல், பட்டையைக் கிளப்புவார் என்று பார்த்தால், தோனி பிரித்து மேய்ந்த உணட்கட் ஓவரில், முதல் பந்திலேயே கேட்ச் ஆனார். 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ராகுல் அவுட்.

20:51 (IST)16 Apr 2019

முரட்டு கட்டையில் இரு ஹிட்டர்ஸ்

10 ஓவர்கள் முடிவில் 75 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது பஞ்சாப். கெயில் 30 ரன்களிலும், மாயங்க் அகர்வால் 26 ரன்களிலும் அவுட்டானார்கள். 

லோகேஷ் ராகுல், டேவிட் மில்லர் களத்தில்….

“நா டொக்கு வைக்கிறேன்.. நீ ஆடு-ன்னு சொல்லி சொல்லி கெயில், மாயங்கை ராகுல் காலி செய்துவிட்டார். மில்லரிடம் இந்த பாட்சா பலிக்காது. அவரு இந்த சீசன்-ல உன்னை விட முரட்டு கட்டை போடுராப்ள…” அடிச்சிருவேன்னா நானு!!

20:20 (IST)16 Apr 2019

21/0

நான்கு ஓவர்கள் முடிவில், பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. கெயில், லோகேஷ் ராகுல் நிதானமாக இன்னிங்ஸ் தொடங்கியுள்ளனர். 

“நாம ரெண்டு பேரும் அவுட்டாகிட்டா, கிழிஞ்சிடும்-னு தெரியும் போல.. அதான் பொறுமையா ஆடுறாங்க”

20:18 (IST)16 Apr 2019

பஞ்சாப் பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார். 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajasthan royals vs kings xi punjab live cricket score updates

Next Story
‘நோ செண்டிமெண்ட்ஸ்… ஒன்லி ஆக்ஷன்’! – உலகக் கோப்பைக்கான இந்திய அணி – ஒரு பார்வைIndian cricket team world cup 2019 squad analysis
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express