Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

Ravi shastri : 2021ம் ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பை டுவென்டி20 தொடர் வரை இவர் அணியின் பயிற்சியாளர் ஆக தொடர்வார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian cricket team, ravi shastri, kapil dev, head coach, bcci, இந்திய கிரிக்கெட் அணி, ரவி சாஸ்திரி, கபில் தேவ், தலைமை பயிற்சியாளர், பிசிசிஐ

indian cricket team, ravi shastri, kapil dev, head coach, bcci, இந்திய கிரிக்கெட் அணி, ரவி சாஸ்திரி, கபில் தேவ், தலைமை பயிற்சியாளர், பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பை டுவென்டி20 தொடர் வரை இவர் அணியின் பயிற்சியாளர் ஆக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உள்ளிட்டோரின் பதவிக்காலம், கடந்த உலககோப்பை தொடருடன் நிறைவடைந்தது. இந்திய அணி, உடனடியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க வேண்டி இருந்ததால், அவர்களின் பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், மைக் ஹெசன் டாம் மூடி உள்ளிட்டோர், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் ஒருவரை தேர்வு செய்வதற்காக கபில்தேவ் தலைமையில் அஞ்சுமன் கெய்க்வாட், இந்திய பெண்கள் அணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய ஆலோசனைக்குழு, மும்பையில் கூடி, நேர்காணல் நடத்தியது.

ரவி சாஸ்திரி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ளதால், அவர் ஸ்கைப் மூலம், நேர்காணலில் பங்கேற்றார். ராஜ்புட், ஹெசன் மற்றும் ராபின் சிங், நேரில் கலந்துகொண்டனர். நேர்காணல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ரவி சாஸ்திரி முதலாவதாகவும், ஹெசன் இரண்டாவதாகவும், டாம் மூடி மூன்றாவதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 

indian cricket team, ravi shastri, kapil dev, head coach, bcci,

2017ம் ஆண்டு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர், தென் ஆப்ரிக்க தொடர் வெற்றி, வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி, 2018 ஆசிய கோப்பை சாம்பியன் உள்ளிட்ட தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது.

இந்திய அணி 2017 ஜூலை மாதம் முதல், விளையாடியுள்ள 21 டெஸ்ட்களில் 13 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி ( சதவீதம் 52.38). 36 டி20 போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை ( சதவீதம் 69.44) 60 ஒருநாள் போட்டிகளில் 43 போட்டிளில் வெற்றி பெற்று சாதனை ( சதவீதம் 71.67%)

துரதிர்ஷ்டவசமான விசயம் யாதெனில், 2015 உலககோப்பை தொடரின் போது ரவி சாஸ்திரி, இந்திய அணியின் இயக்குனராக இருந்தார். அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியிலேயே வெளியேறியது. 2019 உலககோப்பை தொடரின்போது அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போதும் இந்திய அணி அரையிறுதிப்போட்டியின் போதே வெளியேறியது.

Ravi Shastri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment