Advertisment

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜாவை நீக்கியது ஐசிசி!

இதனால், பல்லேகல்லேவில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜாவை நீக்கியது ஐசிசி!

கொழும்புவில் இன்று நடந்து முடிந்த இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. இப்போட்டியில் அஷ்வின், ஜடேஜா தலா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

Advertisment

இந்த நிலையில், ஐசிசியின் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாகக் கூறி, ஜடேஜாவிற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதனால், பல்லேகல்லேவில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நேற்று (சனிக்கிழமை) நடந்த ஆட்டத்தில், 58-வது ஓவரை ஜடேஜா வீசினார். அப்போது கருணரத்னே அடித்த பந்தை தடுத்த ஜடேஜா, கருணரத்னே கிரீஸிற்குள் நின்றுக் கொண்டிருந்த போதே, அவரை நோக்கி வேகமாக வீசினார். இதையடுத்தே, ஜடேஜா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக, ஜடேஜாவிற்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஐசிசி-யின் 2.2.11 விதிப்படி, அவருக்கு மூன்று தகுதியிழப்பு புள்ளிகளும் அளிக்கப்பட்டது.

தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு மேலும் 3 தகுதியிழப்பு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 6 புள்ளிகள் சேர்ந்ததால், ஐசிசியின் 2.2.8 விதிப்படி, ஜடேஜாவிற்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அடுத்த 24 மாதத்திற்குள் மீண்டும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்தால், அவருக்கு மேலும் 4 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்படும்.

India Vs Srilanka Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment