Advertisment

ஜடேஜாவின் பதிலால் அதிர்ந்துபோன பத்திரிக்கையாளர்… இணையத்தில் சூடுபிடித்துள்ள வைரல் வீடியோ…!

Sir Ravindra Jadeja’s reply to journalist in press conference storms social medias tamil news: நேற்றைய ஸ்கட்லாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய பதிலால் பத்திரிக்கையாளர்கள் அதிர்ந்து போனார்கள்.

author-image
Martin Jeyaraj
New Update
Ravindra Jadeja Tamil News: jadeja’s reply to journalist in press conference storms social medias

Ravindra Jadeja Tamil News: 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், குரூப்-2 பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதை உறுதி செய்துள்ளது.

Advertisment

பாகிஸ்தான் அணியை அரை இறுதியில் எதிர்கொள்ளவுள்ள அணிக்கான போட்டியில் குரூப்-2 பிரிவில் உள்ள நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஸ்கட்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி அந்த அணியை 85 ரன்களுக்குள் மடக்கியது.

publive-image

தொடர்ந்து 86 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்திய அணி 6.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணியின் நெட் ரன்ரேட் +1.619 ஆக உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளின் நெட் ரன்ரேட் +1.481 மற்றும் +1.277 ஆகவும் உள்ளன. வரும் ஞாயிற்று கிழமை (நவம்பர் 7) அன்று நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

publive-image

இது ஒருபுறமிருக்க, நேற்றைய ஸ்கட்லாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய பதிலால் பத்திரிக்கையாளர்கள் அதிர்ந்து போனார்கள்.

publive-image

அந்த சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர், "நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்த முடியாவிட்டால், உங்கள் அணி என்ன செய்யும்?" என்று கேட்டார். அதற்கு ஜடேஜா, "பைகளை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்வோம்" என்றார். இந்த பதிலை கேட்ட அந்த பத்திரிக்கையாளர் அதிர்ந்து போனார். ஆனால், ஜடேஜாவோ கூலாக சிரிக்கிறார்.

கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

publive-image

ஸ்கட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில், 7வது ஓவரை வீசிய ஜடேஜா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஸ்கட்லாந்து அணியை நிலைகுழைய செய்தார். எனவே அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Sports New Zealand T20 Afghanistan Scotland Icc Worldcup Ravindra Jadeja Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment