மனைவியை வைத்து ரிஷப் பண்ட்டை கலாய்த்த ஆஸ்திரேலிய கேப்டன்! டென்ஷனான ரசிகர்கள்

அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு, 'சிறந்த பேபி சிட்டர்' என்று குறிப்பிட்டு (கிண்டல் செய்து) பதிவிட்டிருக்கிறார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தில் ‘பேபி சிட்டர்’ (குழந்தைகளைப் பராமரிப்பவர்) என்று குறிப்பிட்டு, பெய்ன் மனைவி பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

மெல்போர்னில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கும், ஆஸ்திரேலிய கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்னுக்கும் ஆரோக்யமான வார்த்தை மோதல்கள் இருந்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்கியபோது, பெய்ன் அவருக்குப் பின்னால் நின்று கொண்டு, “ஒரு நாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப்) ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை. ஆஸ்திரேலிய விடுமுறையை கொஞ்சம் நீட்டித்துக் கொள், ஹோபார்ட் மிக அழகான நகரம். அங்கு இவருக்கு நல்ல வாட்டர் ஃபிரண்ட் அபார்ட்மெண்ட்டை அளிக்கலாம். நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் போது, என் குழந்தைகளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார்.

இதற்கு மறுநாளே, டிம் பெய்ன் பேட்டிங் செய்ய வந்த போது, அருகில் பீல்ட் செய்துக் கொண்டிருந்த மாயங்க் அகர்வாலிடம், “தற்காலிக கேப்டனை பார்த்திருக்கிறாயா? இப்போது பார்க்கிறாய். இவர் பேசுவதற்கு மட்டும் தான் லாயக்கு. சும்மா பந்து போட்டால் போதும், ஸ்டிராடஜி-லாம் தேவையில்லை. அவுட்டாகிடுவார்” என கிண்டல் செய்து வெளுத்து வாங்கினார் ரிஷப்.

“இவனுக்கு பேசுறத தவிர ஒன்னும் தெரியாது” – ரிஷப் பண்ட்டின் மரண கலாய்! நொந்து போன ஆஸி., கேப்டன்

இந்நிலையில், சிட்னியில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் ஜன.3ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இன்று புத்தாண்டை முன்னிட்டு, இரு அணி வீரர்களையும் அழைத்து விருந்து அளித்தார். அப்போது, பெய்ன் தனது குடும்பத்துடன் அந்த நிகழ்வுக்கு வந்திருந்ததை கவனித்த ரிஷப், பெய்ன் கிண்டலாக சொன்னதை செய்தே காண்பித்தார்.

பெய்னின் ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ஆரோக்யமான போட்டி என்பதை குறிப்பிடும் வகையில், ரிஷப் இதனைச் செய்தாலும், பெய்னின் மனைவி போனி பெய்ன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை, ‘சிறந்த பேபி சிட்டர்’ என்று குறிப்பிட்டு (கிண்டல் செய்து) பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Haha! Rishab Pant babysitting Tim Paine’s kids today at #KirribilliHouse ????❤️ . #LoveCricket ???????? @rishabpant

A post shared by Mahi❤️ (@msdianz.world) on

ரிஷப்பின் செயல் ஆரோக்யமானது என ரசிகர்கள் தெரிவித்தாலும், போனி பெய்னின் கிண்டல் வார்த்தையால், டிம் பெய்ன் நினைத்ததை சாதித்துவிட்டார் என்றும் பலரும் சமூக தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close