இந்த ஊரடங்கு தான் நம்மில் எவ்வளவு சிந்தனைகளை விதைக்கிறது. சாமானியன் தொடங்கி செலிப்ரிட்டி வரை அனைவரும் குப்புற படுத்துக் கொண்டோ, மல்லாக்க படுத்துக் கொண்டோ, ஏதேதோ யோசிக்க வைக்கிறது.
அப்படி ரெய்னாவும், ரோஹித்தும் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து யோசித்த போது உதித்த ஐடியா இது.
அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மிக்ஸிங் பிளேயிங் XI.
வடியும் ரத்தம்; படையப்பா பிஜிஎம்; ரஜினிக்கே பிடிச்சிருக்கும் – வீ சல்யூட் வாட்சன் (வீடியோ)
இதுகுறித்து இருவரும் வீடியோ காலில் சாட் செய்ததை மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
அதில், ரோஹித்தும், ரெய்னாவும் ஐபிஎல்-லில் டாப் எதிரிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வீரர்களை தேர்வு செய்து ஒரு புதிய பிளேயிங் லெவனை உருவாக்கினார்கள்.
Openers ➡️ @sachin_rt & @HaydosTweets ✅
Captain ➡️ @msdhoni ✅
Fielding Coach ➡️ @ImRaina ✅
Asst. Coach ➡️ @ImRo45 ✅Who all make it to Ro’s MI-CSK combined XI? Watch to find out!#OneFamily pic.twitter.com/a83K8OOqXu
— Mumbai Indians (@mipaltan) May 13, 2020
அதில் சிஎஸ்கே அணியில் இருந்து ரோஹித் தேர்வு செய்த வீரர்கள்,
மேத்யூ ஹெய்டன்
டு பிளசிஸ்
தோனி
பிராவோ
ஜடேஜா அல்லது ஹர்பஜன் சிங்
அதேபோல் மும்பை அணியில் இருந்து
சச்சின்,
ஹர்திக்,
பொல்லார்ட்,
பும்ரா,
அம்பதி ராயுடு ஆகிய பெயர்களை ரோஹித் பரிந்துரைத்தார்.
இடைமறித்த ரெய்னா, ‘ராயுடு சிஎஸ்கே பிளேயராச்சே…!’ என்று சொல்ல, ‘அடேய் அவர் இங்கிருந்து தானே சென்றார்’ என்று பதில் அளித்த ரோஹித், அணியில் தனக்கான ரோலையும் குறிப்பிட்டுள்ளார்.
‘சச்சின் அவுட்டாகக் கூடாதென இதயம் எப்போதும் துடிக்கும்’ – முன்னாள் பாக்., கேப்டன்
அதாவது, ரோஹித் துணை பயிற்சியாளராம். பீல்டிங் கோச் ரெய்னாவாம்.
எது எப்படி இருந்தாலும் கேப்டன் தோனி தான் என்பதில் இருவருமே தெளிவு.
விட்டா புக் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிடுவாங்க போலயே!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”