Advertisment

'அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது’ - மனமுடைந்து பேசிய கேப்டன் ரோகித்!

கேப்டன் ரோகித் சர்மா, 'ஐபிஎல்லில் அழுத்தத்தின் கீழ் விளையாடிய வீரர்களுக்கு, அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது', என்று தெரிவித்துள்ளார்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rohit Sharma after India’s semifinal loss to England speech in tamil

India's Rohit Sharma shakes hands with teammate India's Hardik Pandya, right, following the T20 World Cup cricket semifinal between England and India in Adelaide, Australia, Thursday, Nov. 10, 2022. England defeated India by ten wickets. (AP Photo/James Elsby)

India vs England T20 World Cup Semi-Final; Rohit Sharma speech Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு ஐசிசி போட்டியில் இந்திய அணி சந்திக்கும் ஏழாவது நாக் அவுட் தோல்வி இதுவாகும்.

Advertisment

இந்நிலையில், இந்தப்போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, 'ஐபிஎல்லில் அழுத்தத்தின் கீழ் விளையாடிய வீரர்களுக்கு, அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது', என்று தெரிவித்துள்ளார்.

"நீங்கள் சென்று அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை மக்களுக்கு கற்பிக்க முடியாது. இவர்களில் பலர் ஐபிஎல்-லில் அழுத்தத்தின் கீழ் விளையாடி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அதைக் கையாள முடிகிறது. நாக் அவுட்கள் என்று வரும்போது, ​​அமைதியாக இருப்பதுதான் நல்லது.

நாங்கள் கடைசி ஓவர்களில் நன்றாக பேட் செய்தோம். பந்து வீச்சு போதுமானதாக இல்லை, நிச்சயமாக ஒரு அணி 17 ஓவர்களில் சேஸ் செய்யக்கூடிய விக்கெட் அல்ல. நாங்கள் பந்துடன் திரும்பவில்லை.

பந்து வீச்சை தொடங்கிய விதத்தில் நாங்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்தோம். புவி அதை இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஸ்டம்ப்களில், அடிலெய்டில், ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட்டில் எங்கே ரன்கள் அடிக்கப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும், நாங்கள் அதைப் பற்றி பேசினோம், ஆனால் அது நடக்கவில்லை.”என்று அவர் கூறினார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13ஆம் தேதி ) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

India Vs England Sports Rohit Sharma Cricket Indian Cricket Team T20 Indian Cricket Worldcup Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment