சாஹல், குல்தீப் யாதவுடன் ரோஹித் ஷர்மா நடத்திய கலகலப்பான இண்டர்வியூ!

ரிலாக்ஸ் மூடில் இருக்கும் இளம் ஸ்பின்னர்களான சாஹல், குல்தீப் ஆகியோரிடம், தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா நடத்திய கலகலப்பான இண்டர்வியூ இது

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக, அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. வரும் சனிக்கிழமை (அக்.7) அன்று ஜார்கண்டில் முதல் டி20 போட்டி தொடங்குகிறது. இதனால் ரிலாக்ஸ் மூடில் இருக்கும் இளம் ஸ்பின்னர்களான சாஹல், குல்தீப் ஆகியோரிடம், தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா நடத்திய கலகலப்பான இண்டர்வியூ இது. ஒரே கேள்வி இருவரிடமும் கேட்கப்படும். அதற்கு அவர்கள் சொல்லும் பதில்கள் இங்கே.

ரோஹித்: உங்களுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள், குறிப்பாக பெண்கள். இதை எப்படி கையாளுகிறீர்கள்?

சாஹல்: நான் அதிகம் பேசுபவன் தான். ஆனாலும், என் முன்னர் ஒரு பெண் நின்றால் நான் வாயை மூடிக் கொண்டு போய் விடுவேன். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பழக்கம் கொண்ட பெண்ணாக இருப்பின், பிரச்சனை இல்லை. ஆனால், புதிதாக ஒரு பெண் என் முன்னே வந்து நின்றால், என்னால் பேச முடியாது. ஒரு சிறிய சிரிப்பை சிதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவேன்.

குல்தீப் யாதவ்: எனக்கு இது ஒரு பிரச்சனை இல்லை. பொதுவாகவே நான் அதிகம் பேச மாட்டேன். ஒருவேளை எனக்கு தெரிந்தவராக இருந்தால், ஒரு சிறிய உரையாடலுடன் முடித்துக் கொள்வேன். அதுவே, புதிய பெண்ணாக இருந்தால் எனக்கும் வெட்கமாகவே இருக்கும். நான் பெண்கள் சூழ இதுவரை இருந்ததில்லை. பள்ளிக் காலங்களில் கூட, எப்போதும் பயிற்சியில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவேன். என்னால் இந்தச் சூழ்நிலையை சமாளிக்க முடியும், அது கடினமான விஷயம் அல்ல.

ரோஹித் ஷர்மா: விளையாடாமல் இருக்கும் போது என்ன செய்வீர்கள்? களத்திற்கு வெளியே உங்களுக்கு ஆர்வமான விஷயங்கள் என்ன?

யுவேந்திர சாஹல்: நான் எரிச்சலாக இருப்பதாக உணரும் போது, என்னால் அறைக்குள்ளே  அடைந்து கிடக்க முடியாது. ஒருவேளை, எங்காவது பார்ட்டிகளுக்கு செல்லவில்லை எனில், டின்னருக்கு வெளியே செல்வது பிடிக்கும். அதிக ஒலியுடன் இசை ஒலிக்கும் இடங்களில் இருக்க எனக்கு அதிகம் பிடிக்கும்.

குல்தீப் யாதவ்: நல்ல நண்பர்கள் இல்லையெனில், நான் வெளியே செல்வதையே விரும்ப மாட்டேன். வீட்டிற்குள் இருப்பதையே விரும்புகிறேன். எனக்கு கால்பந்தாட்டம் மிகவும் பிடிக்கும். அது எனக்கு நன்றாக விளையாட தெரியாவிட்டாலும், பார்ப்பதற்கு பிடிக்கும். சிறுவயதில் கால்பந்தாட்டம் விளையாடிய போது அடிக்கடி காயம் ஏற்பட்டதால், அதை விளையாடவே இப்போது பயமாக உள்ளது. எனக்கென்று ஒரு சாதாரண வாழக்கை உள்ளது. அதன்படி தான் நான் சென்றுக் கொண்டிருக்கிறேன்.

ரோஹித் ஷர்மா: ராபிட் ஃபயர் கேள்விகளுக்கான நேரமிது! உங்களுக்கு பிடித்த நடிகை?

யுவேந்திர சாஹல்: கத்ரீனா கைஃப்

குல்தீப் யாதவ்: ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ்

ரோஹித் ஷர்மா: எந்த காரை சொந்தமாக வாங்க விரும்புகிறீர்கள்?

யுவேந்திர சாஹல்: Porsche. அது செகண்ட் ஹேண்டாக இருந்தாலும் சரி!

குல்தீப் யாதவ்: Mustang

ரோஹித் ஷர்மா: டேட்டிங் செல்ல கனவு கண்டிருக்கும் இடம்?

யுவேந்திர சாஹல்: போரா போரா (ஃபிரெஞ்ச் பாலினேசியாவில் உள்ள தீவு)

குல்தீப் யாதவ்: பாரீஸ்

ரோஹித் ஷர்மா: உங்களுடைய மொபைலில் யாருடைய மொபைல் எண் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?

யுவேந்திர சாஹல்: தி ராக்! ட்வேன் ஜான்சன்.

குல்தீப் யாதவ்: நிச்சயமாக. நெய்மர் Jr. அவரை சந்திக்கவோ அல்லது பேசவோ மிகவும் விரும்புகிறேன்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rohit sharma interviews indias mystery spinners yuzvendra chahal kuldeep yadav on female fans favourite actress dream car

Next Story
இந்தியாவுக்கு நீண்ட சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி! போட்டிகள் குறித்த முழு விவரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express