பெங்களூர் அணியிடம் சரணடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்… பரபரப்பான ஆட்டம்!

82 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.

royal challengers bangalore vs kolkata knight riders rcb vs kkr
royal challengers bangalore vs kolkata knight riders rcb vs kkr

royal challengers bangalore vs kolkata knight riders rcb vs kkr: ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 194 ரன்கள் குவித்தது.82 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.

அனல் பறந்த மேட்ச்:

டாஸ்’ வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோர் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். ரஸ்செல் வீசிய ஓவரில் முதல் பந்தில் சிக்சர் தூக்கிய தேவ்தத் படிக்கல் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் விராட்கோலி களம் இறங்கினார்.

நன்றாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 47 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து டிவில்லியர்ஸ், கோலியுடன் இணைந்தார். டிவில்லியர்ஸ் சிக்சர் விளாசி 23 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.கோலி டிவில்லியர்சுக்கு பக்கபலமாக இருந்தார்.20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் 83 ரன்கள் திரட்டப்பட்டது. விராட்கோலி , டிவில்லியர்ஸ் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. டாம் பான்டன் 8 ரன்னிலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும், சுப்மான் கில் 34 ரன்னிலும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும், இயான் மோர்கன் 8 ரன்னிலும், ரஸ்செல் 16 ரன்னிலும், கம்மின்ஸ் 1 ரன்னிலும், ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

7-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா அணி 3-வது தோல்வியை சந்தித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Royal challengers bangalore vs kolkata knight riders rcb vs kkr highlights ipl

Next Story
20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ரோஜரின் சாதனையை முறியடித்த நடால்!Rafael Nadal ties Roger Federer at 20 Grand Slams by beating Novak Djokovic in Paris
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com