Advertisment

RR vs KXIP 2019 Live Streaming: ஓராண்டு தடைக்குப் பிறகு மீண்டு(ம்) களமிறங்கும் ஸ்மித்! சாதிக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

Rajasthan Royals vs Kings XI Punjab Live Streaming: ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019: RR vs KXIP 2019 Live Streaming, When and Where to Watch

IPL 2019: RR vs KXIP 2019 Live Streaming, When and Where to Watch

IPL 2019, When, Where to Watch RR vs KXIP 2019 Online: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடக்கும் 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

Advertisment

ஐபிஎல் 2019 தொடர் விறுவிறுப்பாகவே தொடங்கியுள்ளது. சிஎஸ்கே, கேகேஆர், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் தங்களது முதல் போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை, 'யுனிவர்சல் பாஸ்' க்ரிஸ் கெயில், லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரன், அஷ்வின், ஆண்ட்ரூ டை ஆகியோர் முக்கிய வீரர்கள். இதில், டேவிட் மில்லர் தற்போது இலங்கைக்கு எதிரான டி2௦ தொடரில் ஆடி வருவதால், இன்றையப் போட்டியில் விளையாடமாட்டார்.

மேலும் படிக்க - தொடர்ந்து 7வது ஆண்டாக தோல்வியுடன் தொடரை தொடங்கிய மும்பை!

குறிப்பாக, 8.4 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டுள்ள '6 வேரியேஷன்' ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, ஸ்டீவன் ஸ்மித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் என மெகா அதிரடி பட்டாளம் உள்ளது. ஒரு வருட தடை காலத்திற்குப் பிறகு ஸ்டீவன் ஸ்மித் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு டபுள் மடங்கு பலம் என்றால் மிகையல்ல...

மேலும் படிக்க - இறுதிக் கட்டத்தில் பிரித்து மேய்ந்த ரசல்! கொல்கத்தா மிரட்டலான வெற்றி!

கேப்டன் அஜின்க்யா தன்னுடைய ஸ்டிரைக் ரேட்டைஇம்ப்ரூவ் செய்தால் நிச்சயம் அவரும் அச்சுறுத்தும் பேட்ஸ்மேன் தான். தவிர, சஞ்சு சாம்சன், மனன் வோஹ்ரா, ராகுல் திரிபாதி போன்ற Hard ஹிட்டர்களும் அந்த அணியில் உள்ளனர். பந்துவீச்சில், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உணட்கட், வருண் ஆரோன் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.

ஆன்லைனைப் பொறுத்தவரை, ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, நமது ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம்.

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment