Advertisment

ராஜஸ்தானை வெளுத்து வாங்கிய பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

IPL 2021, Rajasthan Royals vs Royal Challengers Bangalore live score and match Updates in tamil: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
RR vs RCB live score: IPL 2021, RR vs RCB LIVE Updates and match highlights

 IPL 2021, RR vs RCB match highlights in tamil:  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 43வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Advertisment

இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எவின் லூயிஸ், - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. மேலும் மிகச் சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 ரன்கள் (22 பந்துகள், 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மறுமுனையில் இருந்த எவின் லூயிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த எவின் லூயிஸ் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 37 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

முதல் 10 ஓவர்களில் அதிரடியாக ரான் குவித்து வந்த ராஜஸ்தான் அணி அடுத்த 10 ஓவர்களில் தொடர் விக்கெட் சரிவை சந்தித்தது. 19 ரன்கள் சேர்த்து கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த நிலையில் அவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் 2 பவுண்டரிகளை மட்டும் விரட்டி 14 ரன்னுடன் அவுட் ஆனார். இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 149 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு அணி சார்பில் மீண்டும் பந்து வீச்சில் மிரட்டிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாபாஸ் அகமது மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 150 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணிக்கு வலுவான துவக்கம் கொடுத்த தொடக்க ஆட்டக்காரர் தேவதூத் படிக்கல் 20 ரன் சேர்த்த நிலையில் முஸ்தாபிஜூர் வேகத்தில் சிக்கி வெளியேறினார். இதனால் பவர் பிளே முடிவில் அந்த அணி 1 விக்கெட்டை இழந்து 54 சேர்த்தது.

4 பவுண்டரிகளை ஓடவிட்டு சிறப்பான தொடக்கம் கொடுத்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி (25) மோரிஸ் வீசிய பந்தில் ரன் ஓட முயலுகையில் அவரை ரியான் பராக் ரன் அவுட் ஆக்கினார். இதனால் சற்று பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு ஸ்ரீகர் பாரத் - க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி வலுவான ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகர் பாரத் 44 (35பந்துகள், 3 பவுண்டரி 1 சிக்ஸர்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருடன் மறுமுனையில் இருந்த க்ளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் ( 50* 30 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர்) பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் அந்த அணி 150 ரன்கள் கொண்ட இலக்கை 17.1 ஓவரிலேயே எட்டிப் பிடித்தது. மேலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த சிறப்பான வெற்றி மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது. தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி 7வது இடத்திலேயே நீடிக்கிறது. மேலும், தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ள அந்த அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:41 (IST) 29 Sep 2021
    ராஜஸ்தானை வெளுத்து வாங்கிய பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    150 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



  • 23:38 (IST) 29 Sep 2021
    ராஜஸ்தானை வெளுத்து வாங்கிய பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    150 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



  • 22:50 (IST) 29 Sep 2021
    வெற்றியை நோக்கி பெங்களூரு அணி!

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 123 ரன்களை சேர்த்துள்ளது. மேலும் அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 27 ரன்கள் தேவை.



  • 22:47 (IST) 29 Sep 2021
    மேக்ஸ்வெல் புதிய சாதனை!

    டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் க்ளென் மேக்ஸ்வெல்.



  • 22:29 (IST) 29 Sep 2021
    11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி!

    பந்து வீச்சில் மிரட்டி வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 86 ரன்களை சேர்த்துள்ளது.



  • 22:16 (IST) 29 Sep 2021
    கேப்டன் கோலி ரன் அவுட்!

    4 பவுண்டரிகளை ஓடவிட்டு சிறப்பான தொடக்கம் கொடுத்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி (25) மோரிஸ் வீசிய பந்தில் ரன் ஓட முயலுகையில் ரியான் பராக் ரன் அவுட் ஆக்கினார்.



  • 22:09 (IST) 29 Sep 2021
    படிக்கல் அவுட்!

    150 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய தேவதூத் படிக்கல் 20 ரன் சேர்த்த நிலையில் முஸ்தாபிஜூர் வேகத்தில் சிக்கி வெளியேறினார்.



  • 22:08 (IST) 29 Sep 2021
    பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி!

    150 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 54 சேர்த்துள்ளது.



  • 21:56 (IST) 29 Sep 2021
    களத்தில் பெங்களூரு அணி:

    150 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி - தேவதூத் படிக்கல் ஜோடி களமிறங்கியுள்ளது.

    அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்துள்ள இந்த ஜோடி 4 ஓவர்கள் முடிவில் 41 ரன்களை குவித்துள்ளது.



  • 21:24 (IST) 29 Sep 2021
    பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான்; பெங்களூரு அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

    பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்துள்ளது. எனவே பெங்களூரு அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது



  • 20:57 (IST) 29 Sep 2021
    15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி!

    பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது.



  • 20:47 (IST) 29 Sep 2021
    கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்!

    அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தவித்து வந்த ராஜஸ்தான் அணி தற்போது அதன் முக்கிய வீரரான கேப்டன் சஞ்சுவை இழந்துள்ளது.

    15 பந்துகளை ஆடிய சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 19 ரன்கள் சேர்த்திருந்தார்.



  • 20:46 (IST) 29 Sep 2021
    கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்!

    அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தவித்து வந்த ராஜஸ்தான் அணி தற்போது அதன் முக்கிய வீரரான கேப்டன் சஞ்சுவை இழந்துள்ளது.

    15 பந்துகளை ஆடிய சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 19 ரன்கள் சேர்த்திருந்தார்.



  • 20:43 (IST) 29 Sep 2021
    மஹிபால் லோமோர் அவுட்!

    எவின் லூயிஸ் விக்கெட்டுக்கு பின்னர் களம் கண்ட மஹிபால் லோமோர் சாஹலின் சுழலில் சிக்கி 3 ரன்னுடன் நடையை கட்டினார்.



  • 20:35 (IST) 29 Sep 2021
    எவின் லூயிஸ் அவுட்!

    37 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரி என அடித்து நொறுக்கிய எவின் லூயிஸ் ஜார்ஜ் கார்டன் வீசிய 11.1 ஓவரில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய இவர் ராஜஸ்தான் அணிக்கு மிகச் சிறப்பான தொடக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 20:27 (IST) 29 Sep 2021
    எவின் லூயிஸ் அரைசதம்!

    ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த எவின் லூயிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் யஷஸ்வி அத்தமிழ்நதுள்ள நிலையில் எவின் லூயிஸ் கடந்தார்.



  • 20:05 (IST) 29 Sep 2021
    பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி:

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கியுள்ளனர்.

    ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துள்ள இந்த ஜோடி பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) 56 ரன்களை சேர்த்துள்ளது.

    எவின் லூயிஸ் 41 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 20:05 (IST) 29 Sep 2021
    பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி:

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கியுள்ளனர்.

    ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துள்ள இந்த ஜோடி பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) 56 ரன்களை சேர்த்துள்ளது.

    எவின் லூயிஸ் 41 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 19:32 (IST) 29 Sep 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கியுள்ளனர்.



  • 19:13 (IST) 29 Sep 2021
    இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!

    ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்



  • 19:13 (IST) 29 Sep 2021
    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு!

    ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற அணி பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .



  • 18:50 (IST) 29 Sep 2021
    வெற்றிப்பாதைக்கு திரும்புமா ராஜஸ்தான்?

    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை நடந்த 10 ஆட்டங்களில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ளது. 4 ஆட்டங்களில் வெற்றி இலக்கை நெருங்கி தோல்வியை தழுவியது. மேலும் அந்த அணி கடைசி தோல்வியை சந்தித்து இருந்தது. எனவே, இன்று பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.



  • 18:25 (IST) 29 Sep 2021
    இரு அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:-

    ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, கார்த்திக் தியாகி, முஸ்தாபிசுர் ரஹ்மான்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), டான் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, கைல் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்



  • 18:10 (IST) 29 Sep 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு நடைபெற உள்ள 43வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.



Sports Cricket Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl 2021 Ipl 2021 Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment