Advertisment

9 வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் கண்ணீர் வடித்த தருணம்! - லாரியஸ் விருதில் நெகிழ்ந்த சச்சின்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sachin won laureus awards messi

sachin won laureus awards messi

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 'கேப்டன்' தோனி அடித்த இறுதி சிக்ஸ்க்கு என்ன வேல்யூ இருக்கிறதோ, அதே வேல்யூ இந்திய வீரர்கள் சச்சினை சுமந்து சென்ற தருணத்துக்கும் உள்ளது என்றால் அது மிகையல்ல.

Advertisment

publive-image

உலகெங்கிலும் வாழும் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒவ்வொருவரின் மனதிலும் என்றும் அழியாத அந்த நினைவுகளுக்கு மிக உயரிய விருது கிடைத்துள்ளது.

இது 'கிங்' கோலி ஏரியா, உள்ள வராத! - 50 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியன்

ஆம்! விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான லாரியஸ் விருது, சச்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளது.

publive-image

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் விருதை வழங்க, சச்சின் அதை பெற்றுக் கொண்டார்.

17, 2020

விருது பெற்ற பிறகு பேசிய சச்சின், "இந்த விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதையும், அது நம் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு மாயங்கள் செய்துள்ளது என்பதையும் நினைவூட்டுகிறது. "

நான் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து கடைசி வரை என்றும் எதற்கும் தளர்ந்ததில்லை. இந்த விருதை என் தாய்நாடான இந்தியாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள் சார்பாக பெற்றுக் கொள்கிறேன். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கனவுகளைத் துரத்த உழைக்க வேண்டும்" என்றார்.

உலககோப்பை கபடி - பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை - இந்தியா

2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

publive-image

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறந்த அணிக்கான விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியின் கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி, லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

Sachin Tendulkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment